டெல்லி கலவரத்தை கடுமையாக சாடியவர்! நீதிபதி முரளிதரை சென்னைக்கு மாற்ற கூடாது! மத்திய அரசு எதிர்ப்பு?
சென்னை; ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்யவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை வேறு கிளைக்கு நீதிபதியாக கொண்டு செல்லவும் கொலிஜியம் பரிந்துரை செய்யும். இந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்யும் நீதிபதிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
அதாவது இதை பொதுவாக மத்திய அரசு மறுக்காது. கொலிஜியம் பரிந்துரைகளை அப்படியே மத்திய அரசு ஏற்க வேண்டும். இந்த லிஸ்டை மறுப்பது என்பது மிக மிக அரிதான விஷயம்.
நீதிபதி கே.எம் ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த போது முன்பு கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கமால் இருந்தது. மிகப்பெரிய விவாதத்திற்கு பின்புதான் கடைசியில் வேறு வழியின்றி பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

கொலிஜியம்
இந்த நிலையில் தற்போது அதே போல் கொலிஜியம் பரிந்துரை ஒன்றில் மத்திய அரசு முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளது. அதன்படி ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காமல் உள்ளது. நேற்று மத்திய அரசு கொலிஜியம் அனுப்பிய புதிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதில் முரளிதர் இடமாற்றம் மட்டும் விடுபட்டு உள்ளது.

நீதிபதி
ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டு உள்ளார். கொலிஜியத்தின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. ஆனால் முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னதாக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முரளிதர் நீதிபதியாக இருந்தார். அதன்பின் அவரை பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு இரவோடு இரவாக மாற்றினார்கள்.

சிஏஏ
அப்போதே இது பெரிய சர்ச்சையானது. டெல்லி பார் அசோசியேஷன் இதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. 2020 பிப்ரவரி மாதம் டெல்லியில் இருந்து அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அப்போது சிஏஏ போராட்டம் உச்சத்தில் இருந்தது. அப்போது வெறுப்பு கருத்துக்களை பேசிய பாஜக நிர்வாகிகள் அனுராக் தாக்கூர், பர்வேஸ் வீரமா, அபிநய் வேறுமா, கபில் மிஸ்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் இவர்களின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

டெல்லி கலவரம்
1984ல் ஏற்பட்ட கலவரம் போல மீண்டும் கலவரம் ஏற்பட்டுவிட கூடாது. இதனால் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நீங்கள் ஏன் எதுவுமே செய்யவில்லை. டெல்லி போலீஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறது, என்று நீதிபதி முரளிதர் கடுமையாக விமர்சனம் வைத்தார். அதோடு இரவோடு இரவாக இந்த வழக்கையும் அவர் விசாரணை செய்தார். மறுநாள் இரவே இவர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

என்ன காரணம்?
இதற்கு எதிராக அப்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அதோடு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் இதற்கு எதிராக புகார் அளித்தனர். ஆனால் இந்த டிரான்ஸ்பர் சாதாரண ஒன்றுதான், இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முடிவை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இது பெரிய சர்ச்சையாகி உள்ளது. நீதிபதி முரளிதர் வழக்கறிஞராக இருந்த போது போபால் வாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக வாதாடியவர், நீதிபதியாக இருக்கும் போது 1984 சீக்கிய கலவரத்தில் காங்கிரஸ் நிர்வாகி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications