தமிழகம் என் மாநிலம்..நான் அதன் ஊழியன் : ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம்
உலகின் மிக பழமையான மொழி தமிழ். தமிழக கலாச்சாரம், பண்பாடு, கலைகள் என்னை வியக்கவைத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு எனது மாநிலம் என்றும், நான் அதன் ஊழியன் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மிக பழமையான நீதிமன்றம். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி, இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் பங்கேற்று புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீப் பானர்ஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வரவேற்றார். விழாவில் பேசிய சஞ்சீப் பானார்ஜி, உலகின் மிக பழமையான மொழி தமிழ். தமிழக கலாச்சாரம், பண்பாடு, கலைகள் என்னை வியக்கவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மிக பழமையான நீதிமன்றம். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.
எனது பணிக்கு வக்கீல்களான உங்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும். சிலர் மட்டுமே வக்கீல் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கிறார்கள். பொருளாதாரம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் சேவை முக்கியத்துவம் பெற வேண்டும். இப்போது நான் எனது மற்றொரு வீட்டுக்கு வந்துள்ளேன். இங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக்கொள்வேன். அரசியலமைப்பை உறுதி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இன்றிலிருந்து தமிழ்நாடு எனது மாநிலம். இந்த மாநிலத்தின் ஊழியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications