எம்பிசி டூ எஸ்டி.. 60 ஆண்டு கால கனவு.. நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி.. நரிக்குறவ பெண் அஸ்வினி வீடியோ
சென்னை: மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினத்தவர் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய 60 ஆண்டு கால கனவு என நரிக்குறவ பெண் அஸ்வினி தெரிவித்த வீடியோவை பாஜக அண்ணாமலை தனது ட்விட்டரில் ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் வெளியிட்டுள்ளார்.
மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நரிக்குறவ பெண் அஸ்வினி. இவரும் இவரது சமூகத்தை சேர்ந்தவர்களும் அங்குள்ல ஸ்தல நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு அன்னதான திட்டத்தில் சாப்பிட உட்கார்ந்த போது அவர்கள் அங்குள்ள கோயில் நிர்வாக அதிகாரிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை அஸ்வினி வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

அன்னதான திட்டம்
இது மிகவும் வைரலானது. இதையடுத்து அன்னதான திட்டத்தில் நரிக்குறவர்களுடன் அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு உணவு உட்கொண்டார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்களுக்கு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார். மேலும் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று அவரை திக்குமுக்காட வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

நரிக்குறவர்களின் கோரிக்கை
இதையடுத்து ஒட்டுமொத்த நரிக்குறவர்களின் கோரிக்கையான தங்கள் ஜாதியை எம்பிசி பிரிவிலிருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தனர். இந்த மாற்றம் இருந்தால் நாங்களும் பிறரை போல் சமுதாயத்தில் நல்ல உயர்வை எட்டுவோம் என கோரினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை கடிதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மார்ச் மாதம் எழுதியிருந்தார்.

பழங்குடியினத்தவர் பட்டியல்
இந்த நிலையில் பழங்குடியினத்தவர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டோரை சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவ மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி வருகிறார்கள். அது போல் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலை
அத்தகைய வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நரிக்குறவ பெண் அஸ்வினி பேசுகையில் , வணக்கம் என் பேரு அஸ்வினி, மகாபலிபுரம் பூஞ்சேரி கிராமத்தில் இருந்து பேசுகிறேன். மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியின பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய 60 ஆண்டு கால கனவு.

சலுகையே இல்லை
எங்கள் குலத்து பிள்ளைகள் படித்திருந்தாலும் அவர்களுக்கு அரசு வேலையோ அரசு சலுகைகளோ கிடைக்கவில்லை. இதனால் படித்த படிப்பு வீணாகிவிட்டதே என சும்மா உட்கார்ந்திருந்தார்கள். எம்பிசியிலிருந்து எஸ்டிக்கு மாற்றுமாறு எங்கள் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

மோடி அய்யாவுக்கு நன்றி
இதனால் எங்கள் வேலைகள் கிடைக்கும் என எங்கள் சமூகத்து மக்கள் நம்புகிறார்கள். எங்கள் சமூகத்து குழந்தைகள் உயர் கல்விக்கு செல்வார்கள், அரசு வேலைகளில் அமருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. பழங்குடியினர் பிரிவுக்கு எங்கள் சமூகத்தை மாற்றி கொடுப்பதாக அறிவித்த மோடி அய்யாவுக்கு மீண்டும் நன்றி என்றார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications