சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாரும் மலையை தூக்கி என் கைல வைங்க பார்ப்போம்.. செந்தில் மீம் போட்டு திமுகவை டமால் செய்த கேசிபி!

Google Oneindia Tamil News

சென்னை: நாங்க வந்தா நீட் தேர்வு ரத்து பண்ணிடுவோம், எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன திமுக இப்போது தேர்தலுக்கு பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை வைத்து முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடப்பிரிவு திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு கடினமாக இருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்

இந்த தேர்வால் மருத்துவ கனவுடன் இருக்கும் மாணவர்களின் கனவு கானல் நீராகி போகிறது. பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களை எடுத்திருந்தாலும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் மருத்துவ சீட் கிடைத்துவிடுகிறது. இதனால் 12 ஆம் வகுப்பு வரை படிப்பது வீணா, வெறும் 2 மாதங்கள் நீட்டுக்காக பயிற்சி வகுப்புக்கு செல்வதைதான் அரசு எதிர்பார்க்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வு ரத்து

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக சொல்லியிருந்தார். ஆட்சிக்கும் வந்தார், ஆனால் வந்த மாத்திரத்தில் அவர் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.

திமுக அரசின் தீர்மானம்

திமுக அரசின் தீர்மானம்


இந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. திமுக அரசின் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஏற்றால் நீட் தேர்வு ரத்தாகும். இல்லாவிட்டால் இல்லை என்ற நிலைதான் உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம். மத்திய அரசு தான் ரத்து செய்ய வேண்டும் என திமுக தரப்பில் கூறுவதாக தெரிகிறது.

தேர்தலுக்கு பின்

தேர்தலுக்கு பின்


இதை ஒப்பிட்டு தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என முன்னாள் எம்பி கே. சி. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம் போட்டுள்ளார். ஒரு திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சுந்தரராஜன் தனது பெண்ணை திருமணம் செய்து கொள்ள புத்திசாலியாக இருக்க வேண்டும் என செந்திலிடம் தெரிவிப்பார். அதற்கு செந்திலும் தான் மலையை தூக்க போவதாக ஊர் மக்களிடம் அறிவித்து மக்களை ஒன்று திரட்டுவார். அப்போது ஆஞ்சநேயர் வழிபாடு நடத்திவிட்டு இரு கைகளையும் மேலே உயர்த்திவிட்டு எல்லாரும் உட்காருவார். உடனே அங்கிருந்தவர்கள் மலையை தூக்குறேனு சொன்னியே தூக்குப்பா என கூச்சலிடுவார்கள். அதற்கு செந்திலோ மலையை தூக்கி என் கையில் வைங்க நான் தூக்குறேன் என்பார்.

திமுக தேர்தல்

திமுக தேர்தல்

அந்த காமெடி போல் திமுக தேர்தலுக்கு முன்னர் செந்தில் மலையை தூக்க ஆயத்தமானது போல் நாங்கள் வந்தா நீட் ரத்து பண்ணிடுவோம், எங்களுக்கு ஓட்டு போடுங்க என கேட்பது போலும் மலையை தூக்கி என் கையில் வைங்க என செந்தில் சொன்னது போல் "மத்திய அரசு தான் ரத்து செய்யணும், நாங்கள் தீர்மானம் போட்ருக்கோம்" என காமெடியாக கே சி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Ex MP K.C.Palanisamy compares promise before DMK Reigme, After dmk regime on neet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X