சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 பேர் விடுதலை.. ஆளுருக்கு பிரஷர் கொடுக்காதீங்க.. கே.எஸ்.அழகிரி பேட்டி!

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு வெளியிட்டது. அதில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

K.S. Alagiri says that we should not insist Governor to take such decision on 7 tamils release

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அதன் மீது இன்னும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே.. கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே.. கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துவிட்டது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில் 7 பேர் விடுதலை குறித்து இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கெனவே கூறிவிட்டது. எதுவாக இருந்தாலும் சரி அது சட்டத்துக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றார் கேஎஸ் அழகிரி.

English summary
Tamilnadu Congress Committee President K.S.Alagiri says that we should not insist Governor to take such decision on 7 tamils release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X