தமிழக தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் தலைமைக்கு ஹேப்பி.. ராஜ்யசபா எம்பியாவாரா கே.எஸ்.அழகிரி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கே எஸ் அழகிரிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கு 20 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. எனவே இந்த 20 இடங்களைவிட நீண்ட காலமாக திமுகவில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் பெறுவதற்கு பல கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஸ்டாலினை சந்தித்து தங்களுக்கு 30 தொகுதிகளை போட்டியிட ஒதுக்குமாறு

கறாரான ஸ்டாலின்

கறாரான ஸ்டாலின்


ஆனால் ஸ்டாலினோ இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் மிகவும் கறாராக இருந்தார். இந்த நிலையில் கேட்டது கிடைக்காவிட்டால் எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என மக்கள் நீதி மய்யம் அழைத்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமை

காங்கிரஸ் தலைமை

இந்த நிலையில் திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தலைமை சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து கன்னியாகுமரி எம்பி தொகுதியும் காங்கிரஸுக்கே கொடுத்தது திமுக. இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வென்றது.

காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் கோரிக்கை

இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பணிகள் குறித்து டெல்லி தலைமைக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாம். இதனால் தமிழகத்திலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை தங்களுக்கு தருமாறு திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல்கள்

தகவல்கள்

இந்த ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் இந்த பதவியை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரிக்கு வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

காங்கிரஸுக்கு எம்பி பதவி

காங்கிரஸுக்கு எம்பி பதவி

காங்கிரஸுக்கு ஒரு எம்பி பதவியை கொடுக்க திமுக முன் வந்தால், ஒரு எம்பி பதவிக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 18 பேர் போக மீதம் 16 திமுக எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு ராஜ்யசபா எம்பி தேர்தலில் திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பர் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+