கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்க பாஜக அரசு துடிக்கலாமா? கி.வீரமணி கேள்வி
கொலீஜியம் அமைப்பின் நடைமுறைகளில் வேறுபாடுகள் இருந்தால்கூட அதை ஏற்கவேண்டியது மத்திய அரசின் கடமை என கி.வீரமணி தெரிவித்துள்ளார்
சென்னை : மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா? அனைத்தையும் தன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவர பாஜக அரசு துடிக்கலாமா? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு இறுதி செய்யாதது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என ஓய்வு பெற்ற மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் கி.வீரமணி.
ஒரு நீதிபதியை நியமிக்கலாமா, வேண்டாமா என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காட்டிலும் வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றங்களின் பொறுப்பு
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியல் அமைப்பில் வரையறுத்துள்ள முப்பெரும் பிரிவுகள் நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டமன்ற, நாடாளுமன்றத் துறை ஆகிய மூன்று துறைகளும், அவரவர் எல்லையிலிருந்து தமது அதிகாரப் பங்களிப்பினையொட்டிய கடமைகளை ஆற்றிடவேண்டும். உச்சநீதிமன்ற அதிகாரம், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவோ, விரோதமாகவோ இல்லாத, ஒரு துறையின் அதிகாரத்தை மற்றவர் பறிப்பதாகவோ, ஆக்கிரமிப்பதாகவோ இல்லாமல் இருக்க கண்காணிக்கும் கடமையும், பொறுப்பும் உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கு உண்டு.

ரோடு ரோலர் மெஜாரிட்டி
ஆனால், மற்ற இரு துறைகளிலும், ஏக அதிகாரத்தை செலுத்தி, தங்களுக்குக் கிடைத்துள்ள 'ரோடு ரோலர்' மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, நீதிமன்றம் தவிர, மற்ற இரண்டையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தன்வயப்படுத்திக் கொண்டது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆட்சி. சுதந்திரமாக இயங்கவேண்டிய சி.பி.ஐ., என்ற மத்தியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவும், தற்போதும் நடைபெற்று வரும் நிகழ்வுகளே அதற்கான போதிய சாட்சியங்கள் ஆகும். மிஞ்சியுள்ளது நீதித்துறை ஒன்று; அதையும் வளைக்க முழு முயற்சியும் இப்போது பட்டவர்த்தனமாக உச்சநீதிமன்ற பரிந்துரைகள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன.

நீதித்துறைக்கே சவால்
லட்சக்கணக்கில் தீர்த்து வைக்கப்படாத வழக்குகளின் தேக்கத்திற்குக் காரணம், நீதிபதிகள் பற்றாக்குறை; ஓய்வு பெற்ற பணியிடங்களை நிரப்ப, பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பியும், அவை பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கொடுத்த பகிரங்க வாக்குறுதி நீர்மேல் எழுத்துக்களாகிவிட்டன. நீதித்துறைக்கே மத்திய சட்ட அமைச்சர் பகிரங்கமாக சவால் விட்டு, அந்த அமைப்பின் மாண்பையே கேள்விக் குறியாக்குகிற நிலைகண்டு, ஓய்வு பெற்ற மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் மிகுந்த வேதனையோடு மும்பையில் ஒரு நிகழ்வில் பேசியுள்ளது அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

நீதித்துறை வீழ்ந்தால்
"கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்யாதது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஜனநாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும். அப்போது புதிய இருண்ட சகாப்தம் தொடங்கும். கொலீஜியம் ஒரு நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன், ஒன்றிய அரசு 30 நாள்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, நாடாளுமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சுதந்திரமான, அச்சமற்ற நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை என்றால் நீதித்துறையின் சுதந்திரம் என்னவாகும்? ஒரு நீதிபதியை நியமிக்கலாமா, வேண்டாமா என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காட்டிலும் வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்? எனவே, கொலீஜியம் அமைப்பின் நடை முறைகளில் வேறுபாடுகள் இருந்தால்கூட அதை ஏற்கவேண்டியது ஒன்றிய அமைச்சர் மற்றும் அரசின் கடமை" என்று தெரிவித்தார்.

அநியாயம்
மத்திய ஆட்சியாளரும், உச்சநீதிமன்றமும் இப்படி பகிரங்கமாக பரஸ்பர குற்றச்சாட்டு கூறி, நீதிபதிகள் நியமனங்கள் தேக்கத்தால் பாதிக்கப்படுவது இந்த இருசாராரும் அல்ல; மாறாக வழக்காடிகளான பொதுமக்களும் ஆவார்கள். நீதித்துறையின் சுதந்திரத்திலும் தலையிட்டு, அது தேர்தல் ஆணையங்கள் நியமனம்போல ஆக்கிவிடுவது நேர்மையானதா? நீதியானதா? நியாயமானதா? நாடு எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது. நீதித்துறைதான் மக்களின் கடைசி நம்பிக்கை. அதன் அடிக்கட்டுமானமே தோண்டி இடிக்கப்படும் அநியாயம் வரலாமா? என்பது பொதுவானவர்களின் கேள்வி. பிறகு அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் எதுவும் இல்லாததாக ஆகிவிடக்கூடும்" என்று கி. வீரமணி சாடியுள்ளார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications