அடுத்தடுத்த சர்ச்சைகள் நடுவே காடுவெட்டி குரு மகள் திடீர் திருமணம்! தாய் கூட பங்கேற்கவில்லை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காடுவெட்டி குரு மகள் திடீர் திருமணம்! தாய் கூட பங்கேற்கவில்லை-வீடியோ

    சென்னை: முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான, மறைந்த, காடுவெட்டி குருவின், மகள் விருதாம்பிக்கை திருமணம் இன்று எளிமையாக நடைபெற்றது.

    காடுவெட்டி குருவின், மூன்றாவது தங்கை சந்திரலேகா. இவரது மகன் மனோஜ்-விருதாம்பிக்கை இருவருக்கும் திருமணம் செய்ய சிறு வயதிலேயே தீர்மானிக்கப்பட்டது.

    ஆனால், உடல் நலக்குறைவால் கடந்த மே மாதம் காடுவெட்டி குரு மறைந்துவிட்டார்.

    திருமணம்

    திருமணம்

    இந்த நிலையில், காடுவெட்டி குரு குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. எனவே, பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில், அவர் மறைந்து ஓராண்டு ஆகும் முன்பாக, விருதாம்பிக்கை-மனோஜ் இருவரும் திருமணம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கோயிலில் வைத்து, எளிமையான முறையில் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மனோஜின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும், காடுவெட்டி குருவின் மனைவி லதா உள்ளிட்ட பல உறவினர்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    காடுவெட்டி குரு மனைவி

    காடுவெட்டி குரு மனைவி

    முன்னதாக காடுவெட்டி குருவின் மனைவி சமீபத்தில் ஒரு கடிதம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவருக்கும் மாமியாருக்கும் இடையே பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிரது. இந்த நிலையில் சொத்துக்காக தனது பிள்ளைகளைப் பிரிக்கப் பார்ப்பதாக அவர் கடிதத்தில் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

    மகன் வீடியோ

    மகன் வீடியோ

    அதன் பின்னர் லதாவின் மகன் கனலரசன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தனது தாயாரை உறவினர்கள் சிலர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி பரபரப்பைக் கூட்டினார். அவரை மீட்க டாக்டர் ராமதாஸே நேரடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    தாய் வீடியோ

    தாய் வீடியோ

    இதன் உச்சமாக காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் ஆவேசமாக பேசிய இன்னொரு வீடியோ வெளியானது. அதில் கட்சியினரை கடுமையாக சாடி அவர் பேசியிருந்தார். தனது மகனை எல்லோரும் ஏமாற்றி விட்டதாக அவர் கூறியிருந்தார். மேலும் பாமக மாநில துணை செயலாளர் வைத்தியை அவர் நேருக்கு நேர் வைத்து கடுமையாக சாடிப் பேசியதும் அனைவரையும் அதிர வைத்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது காடுவெட்டி குரு மகளின் திருமணம் நடந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+