செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!
சென்னை: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.
செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இது குறித்து காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விடுத்துள்ள பதிவு வருமாறு;

''பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அண்ணன் டாக்டர் திரு. செந்தில் குமார் (தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் தவறுதலாக சில வார்த்தைகளை பேசி உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவரே அவர் பேசிய வார்த்தைகள் தவறு என்று கூறி தான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்றுள்ளார். மேலும் பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்தும் தான் பேசிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அவை தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இவ்வாறு இருக்கும் பொழுது அண்ணன் டாக்டர் திரு.செந்தில் குமார் அவர்கள் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அண்ணன் அவர்களை இழிவு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் பேசியது தவறு என்றால் அவர் பேசிய கருத்துக்கு எதிர்வினை ஆற்றுங்கள் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணன் அவர்களுக்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் அண்ணன் அவர்களுக்கு துணையாக நிற்போம்.'' இவ்வாறு தெரிவித்துள்ளார். வட மாநிலங்கள் குறித்து செந்தில்குமார் எம்.பி. கூறிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையானதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக அவரை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்ததால் செந்தில்குமார் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்புக் கோரினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications