Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரவுடிகளுக்கு புரியும் மொழி.. அடுத்தடுத்து 2 என்கவுண்டர்! ஆக்‌ஷனில் அருண் ஐபிஎஸ்.. பக்கா ரெக்கார்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொலை, கொலை மிரட்டல். கட்டப்பஞ்சாயத்து என போலீசாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவந்த பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கதைக்கு முடிவுரை எழுதி இருக்கிறது சென்னை போலீஸ் துப்பாக்கி. இதற்கு காரணமே சென்னை கமிஷனர் அருண் ஐபிஎஸ் தான் என்கின்றனர் காவல்துறையினர்.

கடந்த சில மாதங்களாகவே தலைநகர் சென்னையில் கொலை. கொள்ளை. வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்தது பொதுமக்களிடம் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தந்தது. குறிப்பாக தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பெரிய அளவில் பேசப்பட்டது.

arun ips kaka thoppu balaji crime

இதை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திறம்பட கையாள்வார் என்பதன் அடிப்படையிலேயே அருண் ஐபிஎஸ்-க்கு சென்னை கமிஷனர் போஸ்டிங் வழங்கப்பட்டதாக கூறுகின்றனர் காவல்துறையினர். இந்த நிலையில் பதவியேற்ற உடனேயே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் அருண். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது காக்கா தோப்பு பாலாஜி போலீசார் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறார்.

50க்கும் மேற்பட்ட வழக்குகள் காக்கா தோப்பு பாலாஜி மீது இருக்கும் நிலையில் அவரை பிடிக்க போலீசார் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து, சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த அவர் அதற்கு பிறகு தலைமறைவாக இருந்திருக்கிறார். இருந்த போதும் சென்னையில் மீண்டும் தனது செல்வாக்கை நிலை நிறுத்த ரவுடிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது, பணத்தேவைக்கு தொழில் அதிபர்களை மிரட்டுவது என புகார் வந்ததை அடுத்து அவருக்கு கட்டம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் வியாசர்பாடியில் காக்கா தோப்பு பாலாஜி மறைந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக போலீசார் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அருண் ஐபிஎஸ் தான் காரணம் என்கின்றனர் காவல்துறையினர்.

துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியான அவர் சென்னை கமிஷனர் ஆக பதவியேற்ற உடனே ரவுடிகளை கட்டுப்படுத்த ’அவர்களுக்கு புரியும் மொழியில் பேசப்படும்’ எனக் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தான் அவரது செயல்பாடுகளும் இருக்கிறது என்கின்றனர் போலீசார். 1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அருண் சென்னை பல்கலைக்கழகத்தில் பிஇ மெக்கானிக்கல் பட்டப்படிப்பு முடித்தவர். தொடர்ந்து தெலுங்கானா உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் போலீஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டய படிப்பு முடித்திருக்கிறார்.

ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஏஎஸ்பி-யாகவும், கரூர் கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் எஸ்பி ஆகவும் பணியாற்றியவர். அப்பகுதிகளில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை சரி செய்ததில் அருன் ஐபிஎஸ்-ன் பங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சென்னைக்கு வந்தவர் அசிஸ்டன்ட் கமிஷனராக சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை பகுதிகளில் பணியாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறையில் எஸ்பியாகவும், 2012 ஆம் ஆண்டு காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து கிரைம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வந்த அவர் போலீசாரையும் கண்டிக்க தவறவில்லை. இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையராக அருள் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு சென்னையில் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. அது இன்னும் தொடரும் என்கின்றனர் சென்னை காவல்துறையினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+