இதய கோளாறால் அவதிப்பட்டு வரும் கக்கன் மகன்.. முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்றது!
சென்னை: இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதனின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.
அமைச்சர் பதவியில் இருந்த கக்கன் அதிகபட்சமாக நேர்மையை கடைப்பிடித்தவர். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தார். 1971 இல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கக்கனுக்கு வெற்றி கிட்டவில்லை. இதனால் அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

கக்கன்
கக்கனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதை நாளிதழ்களில் பார்த்த சிவாஜி கணேசன் தனக்கு பரிசாக வந்த தங்க சங்கிலியை ஏலம் விட்டு அந்த பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து அதில் வரும் வட்டி கக்கனுக்கு கிடைக்க வழிவகை செய்தார்.

வீட்டில் சிகிச்சை
சில ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த கக்கனுக்கு திடீரென உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டது.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கட்சிக்காரர் ஒருவரை அனுமதிக்கப்பட்டிருந்ததை கேள்விப்பட்டு எம்ஜிஆர் அங்கே சென்றார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு கிளம்பும்போதுதான், கக்கனும் அங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று உடனிருந்தவர்கள் சொல்லி உள்ளனர். உடனே, எம்ஜிஆர் பதற்றமடைந்து, ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று விசாரித்து அவரை சென்று பார்த்தார். சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்ஜிஆர் கண்கள் கலங்கின. அங்கிருந்த டாக்டர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். எனினும் கக்கன்சிகிச்சை பலனின்றி கக்கன் 1981 ஆம் ஆண்டு காலமானார். கக்கனின் மறைவுக்குப் பிறகும், அவரது குடும்பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, மருத்துவ வசதிகள் கிடைக்கும்படியும் எம்ஜிஆர் செய்தார்.

நேர்மை
தனது இறுதி மூச்சு வரை நேர்மையை கடைப்பிடித்த கக்கனை போன்ற இன்னொரு தலைவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. கடைசி வரை சொந்தமாக வீடு கூட இல்லாதவர் கக்கன். இந்த நிலையில் கக்கனுடைய மகனும் தந்தையை போல் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்.

கக்கனின் மகன்
கக்கனுக்கு பாக்கியநாதன் (75) என்ற மகன் உள்ளார். இவருக்கு சிறுநீரகமும் இதயமும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ரூ 4 ஆயிரம் தேவைப்படுகிறது. ஆனால் அதை செலுத்த முடியாத நிலையில் பாக்கியநாதன் குடும்பத்தினர் உள்ளனர்.

மருத்துவ செலவு
முதல்வரின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையும் பாக்கியநாதனுக்கு இல்லை. அந்த கார்டை பெற கக்கனின் பேரன் அதாவது பாக்கியநாதனின் மகன் முயற்சித்து வருகிறார். தனது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என பாக்கியநாதனின் மனைவி சரோஜினிதேவி கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் கணவரின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்றது
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனை ஒன் இந்தியா தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது கக்கனின் மகன் பாக்கியநாதன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பாதிப்பு குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டார். கக்கன் மகனை சிறப்பு வார்டிற்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். இதயத்திற்கு ஆஞ்சியோ உள்பட அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகவும் தரமாகவும் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அவருக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை தமிழக அரசு ஏற்பதாகவும் முதல்வர் தெரிவித்தார் என்றார் தேரணி ராஜன்.

சிஐடி காலனி
சென்னை சிஐடி காலனியில் இவரது குடும்பம் வசித்து வந்தது. இந்தக் காலனியில் பிளாட் எண்.35 ஆனது, கக்கனுக்கு 1971-ம் ஆண்டில் வாடகையின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1981-ல் அவரது இறப்பிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தனர். அதேபோல, இங்குதான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவும் குடியிருந்தார். 3 வருடங்களுக்கு முன்பு, இங்குள்ள அனைவருமே வீட்டை காலி செய்யும் சூழல் ஏற்பட்டது. அப்போது நல்லகண்ணு, "எங்களுக்கு பரவாயில்லை. காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனுக்கு, எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வீடு தந்தாங்க. வாடகை இல்லாமலே இருந்தார். இப்போது அவர் குடும்பத்தினர் அங்கு இருக்கிறாங்க. அவங்களை வெளியேற்ற வேண்டாம்" என்று கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications