அடிச்சது ஜாக்பாட்! கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட நிதி விடுவித்தது அரசு
சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.
அண்மையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது.

குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை எட்டும் வகையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு வீட்டிற்கு 3.50 ரூபாய் லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3500 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications