இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. உங்க வங்கி கணக்கில் ரூ.1 வந்திருக்கா? யாருக்கெல்லாம் 1000 ரூபாய்?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடைசி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது தமிழக பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாமும் தொடர்ச்சியாக நடந்தது.. அந்த முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4ம் தேதி முதல் கட்ட முகாம்கள் நடந்து முடிந்தன.. இதில், 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
விண்ணப்பங்கள்: பிறகு, 2ம் கட்ட முகாம், மறுநாளே அதாவது ஆகஸ்டு 5ம் தேதி தொடங்கப்பட்டு 18ம் தேதி வரை நடைபெற்றது. இதன்மூலம் 1.63 கோடி விண்ணப்பங்களும் தமிழக அரசுக்கு வந்துள்ளன.

சரியான விண்ணப்பங்கள்: சரியான தகவல்களை விண்ணப்பங்களில் மக்கள் வழங்கி இருக்கிறார்களா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என்று அடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அதன்படி ஆய்வுப்பணிகளும் நடந்து முடிந்து, அது தொடர்பான பட்டியல்கள் ரெடியாகி கொண்டிருக்கின்றன.
ATM கார்டுகள்: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது, இந்த மகளிர் உரிமைத்திட்டத்தில் இணைய மாநிலம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்திருக்கிறார்கள்.
அதன்படி, மாதம்தோறும் உரிமைத்தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும் என்றும், அதனால், பயனாளிகளுக்கு வங்கி கணக்கு அவசியம் என்றும், வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம்.. அதுமட்டுல்ல, தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான (ATM) ஏடிஎம் கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறதாம்.. ரூபே கார்டாகவும் கிடைக்க போகிறதாம்..
ரேஷன் கடைகள்: இந்த கார்டு மூலம்தான் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.. வருகிற 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததுமே, அனைவரது வங்கி கணக்குக்கும் ரூ.1000 சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் 1-ந்தேதி பணம் கைக்கு வந்துவிடும் என்பதால், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சரிபார்க்கும் பணிகள்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும்நிலையில், இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த 2 நாட்களாகவே, ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறதாம்.. ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.
தவறான வங்கிக்கணக்குகளுக்கு, உரிமைத்தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில், இந்த ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் செல்போன் வழியாகவும், விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
ஸ்டாலின் நம்பிக்கை: தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது..!!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications