கலைஞர் மகளிர் உரிமை தொகை + பொங்கல் பரிசு தொகுப்பு + நிவாரண தொகை.. சர்ப்ரைஸ் வருது போல.. பரபர ஆலோசனை
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், இன்னொரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன்தாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பலன்களை பெற்று வருகின்றனர்.

பரிசுத்தொகை: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன.. விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போவதால், இதற்கான , பரிசு தொகுப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. கடந்த மாத துவக்கத்திலிருந்தே இதுகுறித்த தகவல்கள் கசிந்தபடி இருந்தன.
தகுதியுள்ள அனைவருக்குமே 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை விஷயத்தை வைத்து, அரசியல் செய்து வருகின்றன.. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், இதையே மையமாக வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.. அதனால்தான், கார்டுதாரர்களுக்கு வரும் 1000 ரூபாயுடன் கூடிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம்.
1000 ரூபாய்: அதாவது, மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் ஆங்காங்கே அதிருப்தி நிலவுவதாலும், எம்பி தேர்தல் நெருங்குவதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வரும் பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்கலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதற்கேற்றவாறு, சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று நம்பிக்கை தகவலை வெளியிட்டிருந்தார்.
அறிவிப்பு: ஆனால், திடீரென மிக்ஜாம் புயலால் 4 மாவட்டங்களில் பாதிப்பை தந்துவிடவும். நிவாரண தொகையை மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுவிட்டது... அந்த நிவாரண தொகை தந்துவரும்நிலையில், யாருமே எதிர்பார்க்காதவகையில், அடுத்ததாக தென்மாவட்டங்களை மழை புரட்டி போட்டுவிட்டது.
ஆக, மழை, வெள்ளத்தால் மொத்தம் 8 மாவட்டங்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகிறதாம்.. அதாவது, ரொக்கத் தொகையாக 1000 ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
பாதிப்புகள்: எப்படியும், தென்மாவட்ட மழை பாதிப்புகளை, முதல்வர் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், நிவாரண தொகை, பொங்கல் தொகுப்பு என பொதுமக்களுக்கு தரப்படும் பணப்பலன்களை, வங்கிகள் மூலமாகவே தரலாம் என்று நேற்றுமுன்தினம் சென்னை ஹைகோர்ட், தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications