கலைஞர் மகளிர் உரிமை தொகை "இவங்களுக்கு" கிடைக்காதாமே.. லிஸ்ட் எடுக்கிறாங்க ஆபீசர்ஸ்.. என்னனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று நேரடி ஆய்வுகள் நடந்து வரும் சூழலில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது... எனவே, இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என்பதையும் அரசு அறிவித்திருந்தது.

உரிமைத்தொகை: இதையடுத்து, ஜூலை மாதம் இதற்கான முகாமும் தொடங்கப்பட்டது. அந்த முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4ம் தேதி முதல் கட்ட முகாம்கள் நடந்து முடிந்தன.. இதில், 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

Kalaignar Magalir Urimai Thogai and Who doesnt get Magalir Urimai Thogai

பிறகு, 2ம் கட்ட முகாம், மறுநாளே அதாவது ஆகஸ்டு 5ம் தேதி தொடங்கப்பட்டு 18ம் தேதி வரை நடைபெற்றது. இந்த 2ம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆகஸ்டு 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாமை அரசு நடத்தியிருந்தது. இதன்மூலம் 1.63 கோடி விண்ணப்பங்களும் தமிழக அரசுக்கு வந்துள்ளன.

விண்ணப்பங்கள்: சரியான தகவல்களை விண்ணப்பங்களில் மக்கள் வழங்கி இருக்கிறார்களா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என்று அடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அதன்படி ஆய்வுப்பணிகளும் நடந்து, முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப்பட்டியலும் தயாராகி கொண்டிருக்கின்றன.

பான் கார்டு: இப்படிப்பட்ட சூழலில், வருடத்துக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வு இருந்தால், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை, தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விண்ணப்பித்திருந்தால், ஆதார் - பான் கார்டு சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது..
அதேபோல, கார் பதிவு, முதியோர் ஓய்வூதியம் பெறும் விவரமும் ஆதார் மூலம் தெரியவந்துள்ளது.. இப்போது, மின்வாரியம் பயன்படுத்தும் மென்பொருளில் மாற்றம் செய்து, வருடத்துக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளனவாம். அதன்படி, ஒவ்வொரு மின் பகிர்மானம், கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகம் வாரியாக, மின் நுகர்வோர் கண்டறியப்படுவார்கள் என்று தெரிகிறது.

3600 யூனிட் மின்சாரம்: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் மின் இணைப்பு கேட்கப்பட்டுள்ளதால், 2020 - 21, 2021 - 22, 2022 - 23ம் ஆண்டுகளில், தலா, 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட, மின் இணைப்பு எண்ணை விண்ணப்பதாரர் குறிப்பிட்டிருந்தால், அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாம்.. இதுகுறித்து, மின் நுகர்வு விவரத்தை, மின் வாரியத்தினர், வருவாய்த்துறையினருக்கு வழங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பெருத்த நம்பிக்கை: ஏற்கனவே, 63 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீக்கப்படலாம் என்றும், தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு, உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் பரபரத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+