"கோடியில் புரள்பவருக்கு 1000 ரூபாய் பிச்சை காசு தான்.. அடக்கி வாசிங்க குஷ்பு".. பொங்கிய அமைச்சர்
சென்னை: 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை கேலி செய்து பேசிய நடிகை குஷ்புவை கண்டித்து அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வீடியோ வெளியிட்டார். அதில் 'கோடியில் புரள்பவருக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை காசாகத்தான் தெரியும்' என்று ஆவேசமாக கீதா ஜீவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சைப் போடுவதால், அவர்களது வாக்குகளைப் பெற்றுவிடலாம் என திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது" என்றார். நடிகை குஷ்புவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையானது..

இந்நிலையில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதா ஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "முதல்வர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து நடிகை குஷ்பு மிகவும் இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக நமது தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை, அரசு பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் குஷ்பு இப்படி இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் குஷ்பு என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.
நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஏதாவது தெரியுமா?. அந்த 1000 ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலனாக உள்ளது.
இதனை சிலர், 'முதல்வர் ஸ்டாலின் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்லியிருக்கிறார்..
நீங்கள்(குஷ்பு) உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீங்க. நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்" இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் குஷ்புவை கண்டித்து பேசியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications