கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்.. இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கு நல்லாவே புரியும்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் எத்தனை பேருக்கு இந்த நிதியாண்டில் அரசு புதிதாக மாதம் 1000 ரூபாய் நிதியுதவி தரப்போகிறது என்பதை பார்ப்போம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மொத்தம் உள்ள இரண்டே கால் கோடி ரேஷன் கார்டுகளில் பாதிப்பேருக்குத்தான் கிடைத்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டி 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை ஜனவரியில் கூடுதலாக இந்த எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போதைய நிலையில் மகளிர் உரிமை தொகையை பொறுத்தவரை தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 8லட்சம் வாங்குவார் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்பு இல்லை.. அதேநேரம் கணிசமானோருக்கு இந்த ஆண்டு மகளிர் உரிமை தொகை கிடைக்க போகிறது. எப்படி என்கிறீர்களா? தங்கம் தென்னரசு இன்றைய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக அரச ஒதுக்கியுள்ள இந்த 13720 கோடி ரூபாய் தொகையை வைத்து 2024-25ம் நிதியாண்டில் 12 மாதங்களுக்கு சுமார் ஒரு கோடியே 1 4லட்சத்து 33 ஆயித்து 33 பேருக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்க முடியும். எனவே தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் எண்ணிக்கையான 1 கோடியே எட்டு லட்சம் என்பது ஒரு கோடியே 1 5லட்சம் என்கிற அளவில் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. இதை அதிகாரப்பூர்வமாக அமைச்சர் தங்கம் தென்னரசும் பட்ஜெட்டில் கூறியுள்ளார்.
எனவே இந்த ஆண்டு புதிதாக சுமார் 7 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 7 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகக்கூடும்.
ஏனெனில் புதிதாக விண்ணப்பிப்போருக்கு ஏப்ரலில் இருந்து பணம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் கணிசமானோர் இன்னும் ஒரு மாதத்தில் அட்டை பெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் குடும்ப அட்டை பெற்ற கையோடு கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மார்ச் மாதத்ததிற்குள் அறிவிப்பு வராவிட்டால் தேர்தல் காலம் என்பததால் மே மாதத்ததிற்கு பிறகே அறிவிப்பு வரும் என்பதால் மகளிர் உரிமை தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் குறித்த எதிர்பார்ப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications