மகளிர் உரிமை தொகை திட்டம்.. வருது சர்ப்ரைஸ்? வேற லெவல் பிளான்.. இது மட்டும் நடந்தால் செம தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகள் பயன்பெறும் விதமாக, திட்டத்துக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவது குறித்தும், குறிப்பாக வருமான வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தில் மாதம் தோறும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வந்த திமுக அரசு, கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்தியது.

Magalir Urimai Thogai Tamil Nadu mk stalin

இந்த திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகிறார்கள். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் இருக்க கூடாது. ஒரு ஆண்டிற்கு வீ்ட்டு உபயோக மின்பயன்பாடு 3,600 யூனிட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

இந்த நிபந்தனைகளால் மகளிர் பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதனால், நிபந்தனைகள் எதுவும் இன்றி அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. எனினும், இந்த விவகாரத்தில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு வரும் செப்டம்பர் 15-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

புதிய ரேஷன் கார்டு.. எந்த தாமதமும் இல்லை.. எல்லோருக்கும் சீக்கிரமாக கிடைக்கும்! அமைச்சர் குட் நியூஸ்


இதனால், இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என சொல்லப்படுகிறது. அதாவது, தற்போது உள்ள வருமான உச்ச வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக நிர்ணயிக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறதாம். மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நடப்பு ஆண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த நிதியின் கீழ் சுமார் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 மகளிருக்கு நிதி அளிக்க முடியும்.

தற்போது அதைவிட குறைவான நிதியே வழங்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பை உயர்த்தினால் கூடுதல் பெண்கள் பயன்பெறுவார்கள். முதல்வரின் காலை உணவு திட்டம் முதலில் அரசு பள்ளிகளில் மட்டும் வழங்கப்பட்டது. இது தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. எனவே இதேபோல, மகளிர் உரிமை தொகை திட்டமும் விரிவுபடுத்தப்படலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?


முதல்வர் முக மு.க. ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் 14 ஆம் தேதி திரும்புகிறார். எனவே, மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் அந்த நாளில், இந்த திட்டம் விரிவுபடுத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தால்தான்..உறுதியான நிலவரம் தெரியும். தற்போது இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியில்லாதவர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

* ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
* குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

* மாநில, மத்திய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர).

* சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
* ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்டவர்கள் தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்ற நிபந்தனை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+