புதிய ரேஷன் கார்டு.. எந்த தாமதமும் இல்லை.. எல்லோருக்கும் சீக்கிரமாக கிடைக்கும்! அமைச்சர் குட் நியூஸ்
சென்னை: புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்ததில் 92,650 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. சிலர் கூறுவது போல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
நம் நாட்டின் அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்று ரேஷன் கார்டு. தமிழகத்தில் அரசின் பல முக்கியமான சலுகைகளை பெற இந்த குடும்ப அட்டை பயன்படுகிறது. இதேபோன்று இருப்பிட சான்றாகவும் இந்த குடும்ப அட்டை பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் அட்டைகள் உள்ளன.

இதில், மக்களுக்கு தேவையான பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் போன்ற பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் பல்வேறு சலுகைகளும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தான் கிடைக்கிறது. தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது வெள்ள நிவாரணம் வழங்கியதும் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு தான்.
அடியோடு மாறுது.. போலீசாருக்கு பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ்.. தீவிரம் காட்டும் தமிழகம் காவல்துறை
இதேபோன்று கொரோனா நிவாரணம், பொங்கல் தொகுப்பு மற்றும் தற்போது வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை என பல அரசு மானியங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு பயன்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டன. ரேஷன் கார்டுடன் செல்போன் நம்பர் இணைக்கப்பட்டு, ரேஷனில் பொருட்கள் வாங்கும்போது கை ரேகை வைக்கும் வசதியும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, குடும்ப ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது.
தாம்பரம் டூ திருச்சிக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.. வார இறுதியில் பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்
இதற்கிடையே லோக்சபா தேர்தல் பணிகள் நடந்ததால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தல், பெயர் சரிபார்த்தல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில் தற்போது புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-
புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94.321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான பயனாளிகள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டதால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மாறுபடாமல் பராமரிக்கப்பட்டதையொட்டி 06.07.2023 முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கனவே அச்சடிக்கும் நிலையிலிருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கொசுவை கொல்லும் நவீன இயந்திரம்.. அசந்து போன ஆனந்த் மகிந்திரா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஆனாலும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 17,197 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதேபோன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 10,380 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
மார்ச் 2024 மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன. நாளதுதேதி வரை பெறப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் 1,63,458 புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள்
கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650 விண்ணப்பங்கள் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் தொடர்ந்து கள விசாரணையும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியும் விரைந்து நடந்து வருகின்றன.
ஆதலால், சிலர் கூறுவது போல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என்பதையும் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications