அடியோடு மாறுது.. போலீசாருக்கு பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ்.. தீவிரம் காட்டும் தமிழகம் காவல்துறை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரின் வருகை பதிவை கண்காணிக்கும் வகையில் பயோ மெட்ரிக் கருவியை பொறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களாம். காவலர்களின் வருகை பதிவேடு குளறுபடியை சரி செய்யும் வகையில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனராம். இது தொடர்பாக அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள். காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும்.. அவர்களின் நலன் கருதியும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது. காலத்திற்கு ஏற்பட காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வசதியாக அதிநவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 1,307 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. போலீசாரின் பணி பதிவேடு, புரமோஷன், சம்பளம், வி.ஆர்.எஸ், பணி நீக்கம் போன்ற நிர்வாக பணிகள் அனைத்தும் அமைச்சு பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். போலீஸ் பணியை பொறுத்தவரை, காலை 7 மணிக்கு காவலர்கள் பணிக்கு வர வேண்டும்.. அதன்பிறகு போலீசருக்கு ரோல் கால் நடத்தப்படு அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அமைச்சு ஊழியர்களை பொறுத்தவரை, பிற அரசு அலுவலர்களை போல காலை 9.30 மணிக்கு பணிக்கு செல்வார்கள்.. இந்த நிலையில் தான், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்ற புகார்கள் எழுகின்றன. அதேபோல, சில காவலர்கள் வருகை பதிவேடுகளில் லீவ் எடுப்பதை குறிப்பிடுவது இல்லை என்றும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சென்றதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இதுபோன்ற புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க கவல்துறை திட்டமிட்டுள்ளதாம். அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்களில் வருகை பதிவை முறைப்படுத்தும் விதமாக 'பயோ மெட்ரிக்' கருவிகள் பொருத்த காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்களாம்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் காவலர்கள் வருகை பதிவேடு விவகாரத்தில் புகார்கள் எழுகின்றன. எனவே இவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதற்காக பயோமெட்ரிக் கருவிகள் அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்துவது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினர். அதிகாரிகள் வைத்த இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு வருகை பதிவேட்டை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications