தாம்பரம் டூ திருச்சிக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.. வார இறுதியில் பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்
சென்னை: சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் 28 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கும், வரும் 30 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வார இறுதி நாளை முன்னிட்டு தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலய திருவிழா வரும் 29 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களிலும் விடுமுறை காலங்களிலும் சொந்த ஊர் செல்லும் பயணிகள் அதிக அளவில் ரயில் பேருந்து உள்ளிட்டவற்றை நாடி செல்கின்றனர்.

இதனால் ரயில்களிலும், பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் செல்லவே விருப்பப்படுவார்கள். மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம், டாய்லெட் வசதி என பல சௌகரியங்கள் உள்ளதால், பயணிகள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புவார்கள். ஆனால், ரயிலில் டிக்கெட்டுகள் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் வசதி இருப்பதால் டிக்கெட் புக்கிங் ஒபன் ஆனதும் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து விடும். இதனால், கடைசி நேரத்தில் பிளான் பண்ணுபவர்களுக்கு இடம் கிடைக்காது. முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும் இதனை கருத்தில் கொண்டு ரயில்வே சார்பில் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும் 28ஆம் தேதி சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- வரும் 28 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ( வண்டி எண்:06118) திருச்சியில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்படும்.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு 12.18 மணிக்கு வரும் இந்த ரயில், 2 நிமிடங்கள் நின்று செல்லும். அதாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து 12.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அரியலூர் (12.53 மணிக்கு வந்து 12.55 க்கு புறப்படும்), விருதாச்சலம் (1.30), விழுப்புரம் (02.10/02.15), செங்கல்பட்டு (3.40/3.42) வழியாக தாம்பரத்திற்கு 4.20 மணிக்கு வந்து சேரும். அதேபோல மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இந்த ரயில் (வண்டி எண்; 06117) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு மாலை 4.10 மணிக்கு சென்றடையும். வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications