ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
டெல்லி: இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு இன்று அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்கனவே அமலில் இருக்கும் என்பிஎஸ் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையே என்ன வேறுபாடுகள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்று அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் தற்போது அமலில் உள்ள என்.பி.எஸ் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்:
* ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ள முடியும்.
* பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதிய திட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும்.
* குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்குவதை குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது. யூபிஎஸ் - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்பிஎஸ் - ஓய்வூதிய திட்டம்: என்பிஎஸ் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும். அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். ஒட்டுமொத்த நிதியின் ஒரு பகுதி அதாவது மொத்த தொகையில் 60 சதவிகிதம் அந்த ஊழியர் ஓய்வு பெறும் போது பெருந்தொகையாக வழங்கப்படும். மீதம் உள்ள தொகை குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
வரி விலக்கு: புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து பங்களிக்க வேண்டியிருந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். அதேபோல் கூடுதலாக ரூ.50 ஆயிரம் ஆண்டு சேமிப்புக்கு 80சிசிடி பிரிவின் கீழ் வருவான வரி விலக்கு அளிக்கப்படும்.
டயர் 1 & டயர் 2: ஓய்வு பெற்றவுடன், தாங்கள் சேகரித்த ஒரு குறிபிட்ட தொகையை எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள தொகை, மாதாந்திர வருமானமாக வழங்கப்படும். என்பிஎஸ் திட்டத்தில் டையர் அக்கவுண்ட்ஸ் மற்றும் டையர் 2 அக்கவுண்ட்ஸ் என இரண்டு பிரிவுகளாக இருந்தது. டையர் 1 ஐ தேர்வு செய்த தனி நபர்கள் ஓய்வுக்கு பிறகே பணத்தை திரும்ப எடுக்க முடியும். டையர் 2-வில் முன் கூட்டியே பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications