கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்! முதற்கட்ட முகாமில் குவிந்த 80 லட்சம் விண்ணப்பங்கள்!
சென்னை: அரசிடமிருந்து மாதம் ரூ.1,000 பெறக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முதற்கட்ட முகாமில் மட்டும்
79.66 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இன்னும் இரண்டாம் கட்ட முகாம் வேறு உள்ளது. நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 2ஆம் கட்ட முகாம் நடைபெறவுள்ளதால் அதில் இன்னும் பல லட்சம் விண்ணப்பங்கள் இந்த திட்டத்தில் இணைய குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூரில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்றன. இதில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று நிறைவடைய உள்ள நிலையில் இந்த முதற்கட்ட முகாமில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,63,472 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த முதற்கட்ட முகாம் நடைபெறும் பகுதிகளில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு முகாமை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை முதற்கட்ட முகாமில் 79.66 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications