ஆகா.. சூப்பரா இருக்கே.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஏடிஎம் கார்டை பார்த்தீங்களா.. என்ன அது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான exclusive ஏடிஎம் கார்டு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.;

தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு பெரும்பாலும் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நாளை ரூபாய் 1 மெசேஜ் அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்படும். நேற்றே பலருக்கும் இந்த சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Kalaingar 1000 RS Housewives money Scheme: This is how the ATM card of women look like

இதற்கான ஏடிஎம் கார்டுகள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து, 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து இருந்தது
.
தற்போது வரை 1.06 கோடி பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சம் 1.06 கோடி பேருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

விழா: இதற்காக தமிழ்நாடு முழுக்க செப்டம்பர் 15ம் தேதி விழா எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். இந்த ஆய்விற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.

இந்த விழாவை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். விழாவை சிறப்பாக, பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. பிரம்மாண்டமாக தமிழ்நாடு முழுக்க இந்த திட்டத்திற்காக விழா கொண்டாட உள்ளனர். பெரும்பாலும் 90 சதவிகித பயனாளிகளுக்கு நாளையே பணம் அனுப்பப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யும் முகாம்களும் அடுத்து தொடங்க உள்ளன.

ஏடிஎம் கார்டுகள்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான exclusive ஏடிஎம் கார்டு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைக் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

நாளை புதிய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வர வைக்கப்படுகிறது. இந்த கார்டில் என்னென்ன வசதிகள் உள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

நவீன சிப் வைக்கப்பட்ட கார்டுகள் ஆகும் இவை.

பாதுகாப்பு கருதி வை பை கார்டுகள் கொடுக்கப்படவில்லை.

மாறாக சாதாரண கார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே கணக்கு உள்ளவர்களுக்கு கார்டுகள் தரப்படவில்லை. இந்த திட்டத்திற்கு கீழ் கணக்கு தொடங்கியவர்களுக்கு மட்டுமே கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

கார்டில் 3 பெண்கள் புகைப்படம் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்தட்டு உழைக்கும் மக்களின் புகைப்படங்கள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் மட்டுமே இந்த கார்டுகளை பயன்படுத்த முடியும்.

பெரும்பாலும் கூட்டுறவு வங்கிகளில்தான் இந்த புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+