ஏப்ரல் 5 ஆம் தேதி செமஸ்டர் தேர்வுக்கு வர முடியாது.. கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் திட்டவட்டம்
சென்னை: ஏப்ரல் 5 ஆம் தேதி கலாஷேத்ரா கல்லூரிக்குள் செல்ல மாட்டோம் என மாணவிகள் திட்டமிட்டு மறுப்பு தெரிவித்தனர்.
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. அந்த 4 பேர் குறித்து புகார் எழுப்பியும் கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலாஷேத்ரா மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் தானாக வந்து விசாரணை நடத்தியது.

அறிக்கை
இது தொடர்பான அறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. தேசிய மகளிர் ஆணையம் சார்பில் வந்தவர் தங்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் குமாரி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு கைப்பட எழுதப்பட்ட புகார்கள் பெறப்பட்டன.

17 வயது மாணவிக்கு ஆபாச மெசேஜ்
இந்த நிலையில் 17 வயது மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பேட் டச் செய்ததாகவும் அவர்களுக்கு ஆபாச சேட்டிங் மெசேஜ் அனுப்பியதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் புகாருக்குள்ளானவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரிக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தலைமறைவு
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். மேலும் மற்ற 3 பேராசிரியர்களை கல்லூரிக்குள் விடக் கூடாது என மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறியுள்ளார். இந்த நிலையில் வரும் 5 ஆம் தேதி முதல் கலாஷேத்ரா மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிக்கு வர மறுப்பு
வரும் ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கால அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி கல்லூரிக்குள் செல்ல மாட்டோம் என கலாஷேத்ரா மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

எப்படி கல்லூரிக்குள் வர முடியும்?
இதுகுறித்து அவர் கூறுகையில் பாலியல் புகாருக்குள்ளானவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது கல்லூரிக்குள் ஏப்ரல் 5 ஆம் தேதி திரும்ப முடியாது. எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எப்படி கல்லூரிக்குள் செல்ல முடியும் என மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications