2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், சீமான் உடனான மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இதன்பின் பல்வேறு கட்சிகளுடன் காளியம்மாள் பேசி வந்த சூழலில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து அக்கட்சியில் இணைந்துள்ளார். இதனால் சட்டசபைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காளியம்மாள் போட்டியிட வாய்ப்புள்ளது.
அவருடன் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உடனிருந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்த பின் காளியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசியல் கட்சியில் இருந்து விலகி ஓராண்டுக்கு பின் மீண்டும் அதிமுகவில் அரசியல் பயணத்தில் இணைந்துள்ளேன். இந்த தேர்தலில் இருந்து மீண்டும் எனது அரசியல் பயணம் தொடரும்.

அதிமுகவை தேர்வு செய்ததற்கு காரணம் உள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்து கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஜனநாயக சூழல் இருக்கிறது. தமிழனின் தலைமையில் கீழ் இயங்குவதற்கு மன உறுதியுடன் இருந்தேன். தற்போதைய அரசியல் சூழலில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.
என்னுடைய முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்படவில்லை. 2013 முதல் நேரடியாக மக்கள் பணியில் இருந்தேன். 6 ஆண்டுகளாக தொடர் அரசியல் பயணம் காரணமாக, குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை. அவர்களோடு நேரம் செலவிட்டு, ஓய்வு எடுத்து கொண்டேன். தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை கட்சித் தலைமை கூறுவார்கள். கட்சியில் இணைந்தால் பொறுப்பு வழங்குவார்கள் தான்.
ஓ.எஸ்.மணியன் உடன் முன்னதாக நட்பு இருந்தது. 2010லேயே அதிமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்திருக்கிறேன்.. அப்போது அரசியலில் அவ்வளவு பெரிய நாட்டமில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியதை பார்த்து என்னை கட்சியில் இணைய வலியுறுத்தினார்கள். அதன்பின் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் தொடர்ந்து ஆலோசனைகள் பெற்றுள்ளேன் என்று தெரீவ்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications