கள்ளக்குறிச்சி வழக்கு.. பெற்றோருக்கு தெரியாமல் "சிலர்" ஆதாயம் அடைகிறார்கள்.. ஹைகோர்ட் விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில், பெற்றோருக்கு தெரியாமல் சிலர் தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள், என்று உயர் நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி பலியானார். இந்த நிலையில் பள்ளி மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை விடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதில் மறுபிரேத பரிசோதனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும், மாணவியின் பெற்றோர் தரப்பு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.

புதிய

புதிய

இதையடுத்து தங்களை சார்ந்த மருத்துவர் பிரேத பரிசோதனையில் இருக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், உயர் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, நான் இதில் புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்க போவது இல்லை. நான் எனது உத்தரவை மாற்ற போவது இல்லை.

 மாணவி உடல்

மாணவி உடல்

மாணவியின் உடல் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறது. மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் இவ்வளவு தாமதம். நீதிமன்றம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? ஒவ்வொரு முறையும் நீங்கள் கோர்ட்டுக்கு வருகிறீர்கள். கோர்ட் இந்த விசாரணையை மொத்தமாக கண்காணிக்கிறது. எனவே நீதிமன்றத்தை நம்புங்கள். நீங்கள் உடலை வைத்து அரசிடம் என்ன பந்தயம் கட்டுகிறீர்களா? அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும், என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மாணவி தரப்பு

மாணவி தரப்பு

இதையடுத்து பேசிய மாணவியின் பெற்றோர் தரப்பு.. நான் என் உரிமையைத்தான் கேட்கிறேன். இதில் நான் நியாயத்தைதான் கேட்கிறேன். எங்கள் தரப்பில் மருத்துவர் இருந்தால், எங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும், என்று வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து பேசிய நீதிபதி, தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது. புதிய பிரேத பரிசோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் உடலை பெற்றுக்கொள்ளுங்கள். நாளை காலை 11 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

பிற்பகல்

பிற்பகல்

இன்று பிற்பகல் 12 மணிக்குள் உங்கள் கருத்தை சொல்லுங்கள். இல்லையென்றால் காவல்துறை நடவடிக்கை பாயும், என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார். மாணவியின் குடும்பம் இந்த நீதிமன்ற அமைப்பு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் . பெற்றோருக்கு தெரியாமல் சிலர் தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். சிலர் இணையதளங்களில் பல கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக சிலர் இப்படி கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

Recommended Video

    Kallakurichi மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு *TamilNadu
    வாட்ஸ் ஆப் வதந்தி

    வாட்ஸ் ஆப் வதந்தி

    என்ன என்று தெரியமாலே சிலர் வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்புகிறார்கள். நீதிமன்றத்தை நம்பலாம் வாட்ஸ் ஆப்பை நம்புகிறீர்களா? வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். பொய்யான வதந்திகளை மக்கள் யாரும் உறுதி செய்யாமல் பரப்ப வேண்டாம். சிலர் இந்த விஷயங்களை வைத்து ஆதாயம் காண பார்க்கிறார்கள். அதில் சிக்க வேண்டாம் என்று நீதிபதி இன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+