"துன்பப்பட்டு, துயரப்பட்டு.. நீங்க வந்தா மட்டும் போதும்!" அழைப்பிதழ் நீட்டிய ஜோடி! மிரண்ட உறவினர்கள்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்க உள்ள திருமணத்திற்காக அச்சிடப்பட்ட புது வித அழைப்பிதழ்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஊரே வியக்கம் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பம். அதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் திருமணம் செய்கிறார்கள்.
சிலரோ திருமண அழைப்பிதழில் இருந்து தங்கள் கிரியேட்டிவிட்டியை புகுத்தி விடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

இந்தியா
இந்தியாவில் பலரது வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு. திருமணத்தில் நம்மைச் சுற்றி உள்ள நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். கள்ளக்குறிச்சியில் திருமணத்திற்காக அடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் ஒன்று இப்போது இணையதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

அழைப்பிதழ்
சற்று நையாண்டித் தனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் மேல் "என்னப்பா விசேஷம்.. கல்யாணம்ப்பா" என்று அச்சிடப்பட்டு உள்ளது. கேள்வி, பதிலைப் போல மாப்பிள்ளை மற்றும் மணமகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. இருவரையும் ஹீரோ மற்றும் ஹீரோயின் எனக் குறிப்பிட்டுள்ளனர். அது சரி..! அன்று எத்தனை பேரும் வந்தாலும் இவர்கள் தானே ஹீரோ -ஹீரோயின்!

துன்பப்பட்டு, துயரப்பட்டு!
திருமண நாள், இடமும் கேள்வி பதிலைப் போலவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்குக் கீழே, "Monday-ல வச்சிருகிங்க கண்டிப்பா வரனும். எப்படியாவது Monday லீவு போட்டு துன்பப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு Buso, traino, flighto புடிச்சு வரனும்னு சொல்ல மாட்டேன். நீங்க வரலேனா எங்களுக்கு சோறு மிச்சம்.. இருந்தாலும் நீங்கக் கண்டிப்பா வந்து சேந்துருங்க" என்று கூறப்பட்டு உள்ளது.

வந்தா மட்டும் போதும்
அதற்குக் கீழ், என்னப்பா சாப்பாடு? ஓடுரது, தாவுரது, நடக்கரது, பறக்கரது, இதையெல்லாம் போடனும்னு எங்களுக்கும் ஆசைதான்.. ஆனால், Non veg போட கூடாது அதனால் veg மட்டும் தான் என்று போட்டுள்ளார்கள். அதற்கு கீழ் கிப்ட் இடத்தில் நீங்கள் அன்போடு நகைய கொடுத்தாலும் சரி, பாசத்தோடு பணத்த கொடுத்தாலும் சரி, எத கொடுத்தாலும் வாங்கிக்கோனு மனசு சொல்லுது. ஆனால் நீங்க வந்தா மட்டும் போதும் என்று வித்தியாசமாக அழைத்து உள்ளனர்.

சரக்கு
அதற்குக் கீழே போட்டிருப்பது தான் ஹைலைட். எல்லாம் சரி.. சரக்கு உண்டா என்ற கேள்விக்கு, "அய்யோ சரக்கா!!! குடி குடியைக் கெடுக்கும் கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும்" என்று நகைச்சுவையாக அதில் குறிப்பிட்டு உள்ளனர். இந்தத் திருமண அழைப்பிதழின் வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications