தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி | ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டசபையில் திமுக, காங். வெளிநடப்பு- வீடியோ
சென்னை: தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.
விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.

சட்டப்பேரவையில் வெளியிட்ட 251 அறிவிப்புகளில், 221 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன, 30 அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.
[மேகம் நீர்வீழ்ச்சி முதல் கல்வராயன் வரை.. தமிழகத்தின் செல்லக்குறிச்சியாக மாற போகும் கள்ளக்குறிச்சி! ]
அந்த வகையில், கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும்
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது.












Click it and Unblock the Notifications