நானும் பிரபுவும்.. மறுத்தாங்க.. நான் வீட்டை விட்டு வந்துட்டேன்.. எம்எல்ஏ கடத்தலை.. செளந்தர்யா அதிரடி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா விளக்கம் சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் சவுந்தர்யா.. நானும் பிரபுவும் 6 மாசமாகவே லவ் செய்து வருகிறோம்.. அந்த லவ் எங்க வீட்டுக்கு தெரிய வரும்போது, எங்க வீட்டில் மறுப்பு சொன்னார்கள்... அப்படி மறுப்பு சொன்னதால், நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. இது என்னுடைய முழு சம்மதத்துடன்தான் இந்த கல்யாணம் நடந்தது.. யாரும் மிரட்டல.. கடத்தவும் இல்லை" என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் காதல் மனைவி சவுந்தர்யா ஒரு வீடியோ மூலம் விளக்கம் தந்துள்ளார்.

Recommended Video

    யாரும் கடத்தல.. என் சம்மதத்துடன்தான் கல்யாணம் நடந்தது.. எம்எல்ஏ பிரபுவின் காதல் மனைவி சவுந்தர்யா - வீடியோ

    அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு... இவர் சவுந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று சவுந்தர்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் பிரபு.. தியாகதுருகத்தில் உள்ள அவரது வீட்டில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது.

    சுவாமிநாதன்

    சுவாமிநாதன்

    இந்த திருமணத்துக்கு சவுந்தர்யாவின் தந்தை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.. அந்த எதிர்ப்பை நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கும் பிரத்யேகமாக பேட்டி தந்து வெளிப்படுத்தினார்.. தன் மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

     திருமணம்

    திருமணம்

    இதனிடையே, நேற்று முதல், புதுமண தம்பதி இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் தங்களது திருமணம் பற்றி தெரிவித்திருந்தனர்.. சவுந்தர்யாவை கடத்தி வரவில்லை.. மனசார காதலித்துதான் கல்யாணம் செய்தோம்.. வீட்டில் போய் முறைப்படி பெண் கேட்டும், அவர் அப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால், என் பெற்றோர் முன்னிலையில், சவுந்தர்யாவின் முழு விருப்பத்தின் பேரில் இந்த திருமணம் நடந்தது" என்று அந்த வீடியோவில் தெளிவுபடுத்தி இருந்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    எனினும் பிரபு திருமணம் குறித்து ஏராளமான பரபரப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது.. இந்நிலையில் சவுந்தர்யாவே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்ற விளக்கத்தையும் தெளிவாக சொல்லி உள்ளார்.. அதில், "வணக்கம்.. நான் சவுந்தர்யா.. நானும் பிரபு எம்எல்ஏ அவர்களும், 4, 6 மாதமாகவே லவ் செய்து வருகிறோம்.. அந்த லவ் எங்க வீட்டுக்கு தெரிய வரும்போது, எங்க வீட்டில் மறுப்பு சொன்னார்கள்.

     முழு சம்மதம்

    முழு சம்மதம்

    அப்படி மறுப்பு சொன்னதால், நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. இது என்னுடைய முழு சம்மதத்துடன்தான் இந்த கல்யாணம் நடந்தது.. யாருடைய மிரட்டலினாலோ அல்லது கடத்திட்டு வந்தது திருமணம் செய்ததோ கிடையாது.. அப்படி எந்த மாதிரி ஒரு விஷயமும் நடக்கல.. என்னுடைய முழு சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடைபெற்து" என்று கூறியுள்ளார்.

     நாளை விசாரணை

    நாளை விசாரணை

    சவுந்தர்யாவின் அப்பா சுவாமிநாதன் நம்மிடம் பேசும்போது, இத்தனை மாசமா லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. பிப்ரவரியில் இருந்தே காலேஜ் லீவு விட்டாச்சு.. அப்படி இருக்கும்போது, எப்படி இவர்கள் இந்த 4 மாசத்தில் லவ் பண்ணியிருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+