கள்ளக்குறிச்சி: குறவர் சமூகம் சக்திவேல் உட்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு
சென்னை: கள்ளக்குறிச்சியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 3 நாட்களுக்குப் பின்னர் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 கொள்ளை வழக்குகளுக்காக எஞ்சிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என போலீசார் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால் இன்று பகல் வரை 2 பேர்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மாலையில் கர்ப்பிணியின் கணவர் சக்திவேல், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி அருகே மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 14-ந் தேதி போலீசாரால் அடித்து உதைத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த 3 நாட்களாக போலீசார் அழைத்துச் சென்ற 5 பேரும் எங்கே இருக்கின்றனர் என்கிற தகவல் தெரியவில்லை எனவும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தனர்.
இவர்களில் சக்திவேல் என்பவரின் கர்ப்பிணி மனைவி தம்மை தாக்கிவிட்டு போலீசார் இழுத்துச் சென்றதாக கூறியிருந்தார். இந்த சம்பவங்கள் அனைத்துமே அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி இருக்கக் கூடிய ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நினைவுபடுத்துவதாக இருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஜெய்பீம் போல...
ஜெய்பீம் திரைப்படத்தில் கர்ப்பிணி செங்கேணி, போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கணவர் ராஜாக்கண்ணு என்ன ஆனார் என தெரியாமல் போலீசாரின் துன்புறுத்தலுக்குள்ளானார். பின்னர் வழக்கறிஞர் சந்துருவின் முயற்சியால் ராஜாக்கண்ணு போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார் என்பது அம்பலமானது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம்தான் ஜெய்பீம் திரைப்படம்.

கொள்ளையில் 3 பேர்
இந்த நிலையில் இந்த செய்திகளை நாம் பதிவு செய்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள போலீசார், 13 கொள்ளை வழக்குகள் தொடர்பாகவே 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். இவர்களில் 3 பேரின் கைரேகைகள் கொள்ளை சம்பவங்களில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப் போகின்றன.

3 பேரை ஆஜர்படுத்துவோம்
இதனால் இந்த 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர். எஞ்சிய 2 பேரும் விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களும் வெளியிட்டிருக்கிறோம் என்றனர். அந்த புகைப்படங்களையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

கர்ப்பிணியின் கணவர் கதி என்ன?
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் கூறியபடி 3 பேரில் 2 பேர் மட்டுமே ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கர்ப்பிணியின் கணவரான சக்திவேல் மட்டும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் சக்திவேலுக்கு என்ன ஆனது? என அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

கர்ப்பிணியின் கணவர் ஆஜர்
இந்த நிலையில் இன்று இரவு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சக்திவேலுவையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்கள் மூவர் மீதும் 13 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மூவரும் கள்ளக்குறிச்சி கிளை சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications