ஸ்டாலினுக்கு திறமை இருக்கா.. தைரியம் இருக்கா.. கள்ளக்குறிச்சி பிரபு பொளேர் கேள்வி!
சென்னை: மக்கள் ஆதரவு இல்லாத எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்கும் திறமை ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபு கேட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து கொண்டே தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களில் பிரபுவும் ஒருவர். இவருக்கு சமீபத்தில் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு ஸ்டே வாங்கி பிரபு உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் தப்பினர்.
இந்த நிலையில் பிரபு ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், மக்கள் ஆதரவை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்க மிகபெரிய தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு திறமை இருக்கிறதா என்று பிரபு கேட்டுள்ளார்.

பிரபு
கள்ளக்குறிச்சி சட்டபேரவை தொகுதியின் உறுப்பினர் பிரபு. இவர் சசிகலாவின் தீவிர விசுவாசி. உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவுடன் இவருக்கு கருத்து வேறுபாடு உண்டு. இதன் காரணமாக இவர் தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இதனால் பேரவைத் தலைவர் இவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நிலை என்ன
தற்போது இடைத் தேர்தல் முடிந்து, அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பியுள்ள நிலையில் பிரபுவிடம் பேசினோம். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் வந்தால் உங்கள் நிலை என்ன என்று பிரபுவிடம் ஒன் இந்தியா தமிழுக்காக கேட்டபோது அவர் கூறியதாவது:

கொறடா உத்தரவுப்படி
"நான் தினகரனின் ஆதரவாளர்தான். ஆனாலும் அதிமுக எம்.எல்.எ. ஆதலால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதிமுக கொறடா என்ன கூறுகிறாரோ அதன்படிதான் நான் செயல்படுவேன். இது ஜெயலலிதாவால் அமைந்த ஆட்சி. இப்போது இருக்கும் ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் ஏற்படுத்தியவர் சசிகலா. ஆகவே சசிகலா இந்த ஆட்சியை கலைக்க விரும்ப மாட்டார். ஆகவே அதிமுக கொறடா உத்தரவுப்படியே செயல்படுவேன்" என்று கூறினார்.

சிவி சண்முகம்
நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று அமைச்சர் சி.வி சண்முகம் உங்களிடம் பேசினாரா என்று கேட்டபோது "அவர் எங்கள் மாவட்ட அமைச்சர் எனக்கும் குமாரகுருவுகும் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது அவரிடம் உதவி கேட்டு சென்றபோது அவர் எந்த உதவியும் செய்யவில்லை. அப்போதே அவர் மீதிருந்த மரியாதை இல்லாமல் போய்விட்டது".

சசிகலா உத்தரவுப்படி
தினகரன் இந்த ஆட்சியை மாற்றுவோம் என்கிறார். நீங்கள் அதிமுக கொறடா உத்தரவுப்படியே செயல்படுவேன் என்கிறீர்கள் அதே வேளையில் தினகரனின் ஆதரவாளர் என்றும் கூறிக் கொள்கிறீர்களே என்று கேட்டபோது "நான் இப்போது வரை அதிமுக எம்.எல்.ஏ. ஆகையால் அதிமுக கொறடா என்ன கூறுகிறாரோ அதுபடிதான் செயல்படுவேன். அதே வேளையில் சசிகலாவை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளேன்" என்று கூறினார்.

கவிழ விரும்ப மாட்டார் சசிகலா
தொடர்ந்து நம்மிடம் பேசியவர் சசிகலாவே இந்த ஆட்சியை கவிழ்க்க விரும்ப மாட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் வேளையில் அதிமுக கொறடாவுக்கு சசிகலாவிடம் இருந்து உத்தரவு வரும். ஆகையால் ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். தொடர்ந்து நம்மிடம் பேசியவர் ஜெயலலிதா கருணாநிதிதான் எனக்கு தகுந்த எதிரி என்று கூறினார்.

மக்களுக்கு மரியாதை இல்லை
இப்போது எடப்பாடி அரசு மீது தமிழக மக்களுக்கு மரியாதையோ நம்பிக்கையோ இல்லை. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்கும் திறமை கருணாநிதி என்ற மிகபெரிய தலைவரின் மகனான ஸ்டாலினுக்கு உள்ளதா என்றுசவால் விடுத்தார். மக்களின் ஆதரவை இழந்துவிட்ட அரசையே ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்றும் நம்மிடம் கள்ளக்குறிச்சி பிரபு கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications