தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது- கமல், டிடிவி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க அன்பழகன் இழப்பு வேதனைக்குரியது என கமல்ஹாசனும் டிடிவி தினகரனும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    பேராசிரியர் க. அன்பழகன் மறைவிக்கு தலைவர்கள் இரங்கல்

    திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

    Kamal and TTV Dinakaran expresses their condolence to K Anbalagan

    திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தார். பின்னர் அவரது உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஸ்டாலினிடம் விளக்கினர். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் காலமானார்.

    அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில் தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    அது போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+