கமல் விழாவில் ரஜினி சல்யூட் அடித்த விருந்தினர்.. இணையம் முழுக்க வைரலாகும் வீடியோ.. யார் அது?

கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சல்யூட் அடித்த மூத்த விருந்தினர் யார் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமல் விழாவில் ரஜினி சல்யூட் அடித்த விருந்தினர்.. வைரலாகும் வீடியோ

    சென்னை: கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சல்யூட் அடித்த மூத்த விருந்தினர் யார் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது.

    நேற்று சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா எடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்தது. பல சுவாரசியமான சம்பவங்கள் இந்த விழாவில் நடந்தது.

    வைரலானது

    வைரலானது

    இந்த விழாவில் ரஜினியின் பேச்சு, மறைமுகமான அரசியல் கருத்து எல்லாம் வைரலானது. தமிழக அரசியலில் நடக்கும் அதிசய நிகழ்வுகள் குறித்து அவர் பேசியதும் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் ரஜினி உருக்கமாக பேசினார்.

    வணங்கினார்

    வணங்கினார்

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் எஸ்.பி. முத்துராமனை பார்த்ததும் அவரின் காலில் விழுந்து வணங்கினார். பின் அவரிடம் நீண்ட நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பழைய படங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் குறித்தும் இருவரும் உரையாடினார்கள்.

    இடைக்கு சென்றார்

    இடைக்கு சென்றார்

    அதன்பின் மேடைக்கு செல்லும் போது நடிகர் ரஜினிகாந்த் மூத்த விருந்தினர் ஒருவருக்கு சல்யூட் அடித்தார். ரஜினி படத்தில் சல்யூட் அடிப்பது போலவே மிகவும் ஸ்டைலாக சல்யூட் அடித்தார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    யார் அவர்?

    யார் அவர்?

    அந்த மூத்த விருந்தினருக்கு ரஜினிக்கு திரும்பி சல்யூட் வைத்தார். பின் இருவரும் சிரித்தபடி மாற்றி மாற்றி கைகுலுக்கிக் கொண்டனர். இதையடுத்தி ரஜினி சல்யூட் வைத்த அந்த நபர் யார் என்று விவாதம் இணையத்தில் எழுந்தது. இதற்கு பலரும் ஒவ்வொரு விதமாக பதில் அளித்தனர்.

    இயக்குனர்

    இந்த நிலையில் ரஜினி சல்யூட் அடித்த நபர் பிரபல பாலிவுட் இயக்குநர் ரமேஷ் சிப்பி என்பது தெரிய வந்துள்ளது. ரமேஷ் சிப்பி பத்ம ஸ்ரீ விருது பெற்ற இயக்குனர். அமிதாப் பச்சனை வைத்து இவர் இயக்கிய ஷோலே படம் உலகம் முழுக்க பிரபலம் ஆகும். 11 படங்களை இயக்கிய இவர், 12 படங்களை தயாரித்து இருக்கிறார்.

    ரமேஷ் சிப்பி

    ரமேஷ் சிப்பி

    இந்தியாவில் மிக சிறந்த மூன்று ஹீரோக்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூன்று பேருக்கும் நெருங்கிய நண்பர் இவர். ஹே ராம் படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனுடன் இவர் மிகவும் நெருக்கமானார். அதில் இருந்து கமல்ஹாசன் மற்றும் ரமேஷ் சிப்பி இருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் அவர் நேற்று கமல் 60 விழாவிற்கு அழைக்கப்பட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+