மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம்! செம டீம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர் தேர்வுக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் பழ கருப்பையா, பொன் ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை தந்துள்ளனர்.

அந்த வகையில் விருப்ப மனுக்கள் குறித்து பேச மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. தகுதிசால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என்னுடைய தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழு வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணலில் ஈடுபடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர் தேர்வுக் குழுவினை அறிவிக்கிறேன்.
தலைவர்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
பழ கருப்பையா, மூத்த அரசியலாளர்
பொன்ராஜ், அப்துல் கலாமின் ஆலோசகர்
ஆர் ரங்கராஜன் ஐஏஎஸ் (ஓய்வு)
செந்தில் ஆறுமுகம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
சுரேஷ் ஐயர், தேர்தல் பிரச்சார வியூக அலுவலகம்
வெற்றி நமதே
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications