டிக்கெட் இருந்தும் நாடோடி பழங்குடியினருக்கு அனுமதி மறுப்பா.. ரோகிணி தியேட்டருக்கு கமல்ஹாசன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக்கெட் இருந்தும் நாடோடி பழங்குடியினருக்கு அனுமதி மறுத்ததாக ரோகிணி தியேட்டருக்கு மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடித்த பத்து தல படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் மாதமே ரிலீஸுக்கு காத்திருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்றைய தினம் ரிலீஸானது. இதன் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த படத்தில் சிம்புவின் கெட்டப் வித்தியாசமாக இருந்தது. எப்போதும் போல் காதல், டூயட், சண்டை என இல்லாமல் லுக்கே வித்தியாசமாக இருந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தரமான சம்பவம் படத்தில் இருக்கும் என்பதால் சிம்புவின் பேன்ஸ் படத்தை பார்க்க ஆவலாக காத்திருந்தனர். இந்த நிலையில் சிம்பு ரசிகர் ஒருவர் 10 டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி நரிக்குறவர்களுக்கு விநியோகம் செய்தார்.

குழந்தைகளுடன் சினிமா

குழந்தைகளுடன் சினிமா

அவர்களும் குழந்தைகளுடன் சினிமா பார்க்க ஆர்வமாக தியேட்டருக்கு வந்தனர். அப்போது டிக்கெட் பரிசோதகர் குமரேசன் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நரிக்குறவ பெண் ஒருவர் டிக்கெட்டை நீட்டினார். அப்போது அவரை குமரேசன் விரட்டினார். அதற்கு அந்த பெண் டிக்கெட் இருக்கே உள்ளே விடுங்கள் என்றார்.

சைகையால் விரட்டிய பணியாளர்

சைகையால் விரட்டிய பணியாளர்

மீண்டும் அந்த பெண் கேட்டபோது சைகையால் விரட்டினார். பின்னர் இன்னொரு நரிக்குறவர் வந்து டிக்கெட்டை நீட்டினார். அவரையும் விரட்டினார். இப்படியாத நரிக்குறவர்களை அடிக்க பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த சிம்பு ரசிகர்களும் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறு கூறியும் குமரேசன் கேட்கவில்லை.

 வாட்ச்மேன்

வாட்ச்மேன்

இதனிடையே தியேட்டர் வாட்ச்மேன் வந்து நரிக்குறவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். அப்போது நீங்கள் படம் பார்க்கவில்லை என யார் அழுதது, எதற்காக இங்க வந்தீர்கள். வந்து தியேட்டரில் பொடி போட்டு பாக்கு போட்டு ஆங்காங்கே துப்பிவிட்டு செல்வீர்கள் என மிகவும் கொடூர வார்த்தைகளால் அவர்களை விமர்சித்தார். ஆசையாக குழந்தைகளுடன் வந்த நரிக்குறவர்கள் கண்ணீர் சிந்தினர்.

டிக்கெட்

டிக்கெட்

இதையடுத்து அவர்களுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த சிம்பு ரசிகர் அவர்களை அழைத்து கொண்டு தியேட்டருக்குள் சென்றார். அப்போதும் அவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் மேனேஜர் இந்த பிரச்சினை திசைதிருப்பப்படுவதை உணர்ந்து நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு பாப்கார்ன் வாங்கி கொடுத்து உள்ளே அனுப்பினார்.

வீடியோ

வீடியோ

மேலும் அவர்கள் படம்பார்க்கும் வீடியோவையும் ரோகிணி தியேட்டர் வெளியிட்டிருந்தது. இதனிடையே தியேட்டருக்குள் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ், எம்பி செந்தில் குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ரோகிணி திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் ஒரு விளக்கமளித்தார்.

நரிக்குறவர்கள் என்பதால் அல்ல

நரிக்குறவர்கள் என்பதால் அல்ல

அதில் அவர் கூறியிருப்பதாவது: அதில் நரிக்குறவர்கள் என்பதால் அனுமதி மறுக்கப்படவில்லை. யூஏ சான்றிதழ் படங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என்பதால் அந்த படத்திற்கு அவர்களை அனுமதிக்கவில்லை என கூறியிருந்தார். ஆனால் குழந்தையுடன் வந்த மற்றவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக அங்கிருந்தோர் தெரிவிக்கிறார்கள்.

கமல்ஹாசன் கண்டனம்

கமல்ஹாசன் கண்டனம்


இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் காட்டமான ட்வீட்டை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறுகையில் டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+