Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவர் அப்துல் ஜப்பார்: கமல், உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவர் மறைந்த அப்துல் ஜப்பார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும் பன்முக ஆளுமையாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

அப்துல் ஜப்பார் மறைவுக்கு கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இரங்கல்:

Kamal Haasan condoles demise of Tamil cricket commentator Abdul Jabbar

வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.

மூத்த பத்திரிகையாளர் குணசேகரன்: ஆற்றொழுக்கான தமிழும் உற்சாகம் குன்றாத துடிப்பும் நினைவில் நிற்கின்றன. தனிப்பட்ட உரையாடல்களில் பேரன்பு காட்டியவர். விவாதங்களின் ரசிகர். தமிழ் மீது அய்யா அப்துல்ஜப்பார் கொண்டிருந்த தீரா காதலைப்போல், அவரது சொற்களுக்கும் மரணமில்லை; காற்றில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். அஞ்சலி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு: தாய்மொழியை எப்படி நேசிக்க வேண்டும்; உச்சரிக்க வேண்டும் என அய்யா #அப்துல்ஜப்பார் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் தமிழீழ விடுதலை அரசியலை ஆதரித்த தமிழர். அய்யாவுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்கம்.

பேராசிரியர் ஹாஜா கனி: ஈர்ப்புமிகு எழுத்தாளர் சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் மறைவுற்றார். (இறைவனிடமிருந்து வந்தோம், அவனிடமே மீள்வோராய் உள்ளோம்) அவர் மகன் எமது அன்பு நண்பர் ஆசிஃப் மீரான் உள்ளிட்ட குடும்பத்தார்க்கும் அவர் பிரிவால் வாடும் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இறைவன் அன்னார்க்கு அருள்புரிவானாக..

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்: தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளராக உலக தமிழர்களின் இதயங்களை கவர்ந்த திரு.சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் மரணச் செய்திக்கேட்டுச் செய்தி அதிர்ச்சி அடைந்தேன். உலகத்தமிழரை தன் குரலால் இணைத்த அவரது மறைவு நம் தமிழ்ச்சமூகத்துக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தார்- நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+