ட்ரெட்மில்லில் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அசத்திய அஸ்வின் குமாருக்கு கமல்ஹாசன் பாராட்டுகள்
சென்னை: ட்ரெட்மில்லில் தமது அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அசத்திய அஸ்வின்குமார் என்ற ரசிகருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வ சகோதரர்கள் மிகப் பெரிய வெற்றிப் படம். இந்த படத்தில் புலிவேசத்துடன் அண்ணாத்தே ஆடுறார் என கமல்ஹாசன் ஆடிய பாடல் அப்படி ஒரு சக்கை போடு போட்டது அந்த காலத்தில்!

இன்றும் அந்த பாடல் எல்லோரையும் துள்ள வைக்கக் கூடியது. இந்த பாடலை ட்ரெட்மில்லில் கமலின் தீவிர ரசிகரான அஸ்வின்குமார் அசத்தலான நடனமாடி தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டது. கமல்ஹாசனை போன்ற முகத் தோற்றத்துடன் அஸ்வின் ஆடிய ஆட்டம், 80களின் கமலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

இந்த வீடியோவை பார்த்த கமல், அஸ்வின் குமாரை மனம் திறந்து பாராட்டியுள்ளார். அதில். நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு.
என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நெகிழ்ச்சி நன்றி
கமல்ஹாசனின் இந்த பாராட்டுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார் அஸ்வின்குமார். அய்யா- அப்பனே.. என கமல்ஹாசனை குறிப்பிட்ட அஸ்வின், அவரது வாழ்த்தை தமது வீட்டில் பிரேம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.

-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications