“காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலை.. கமல்ஹாசன் செய்துக்கொண்டிருக்கிறார்” - திருமாவளவன்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மீது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. இந்த சூழலில், கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த 'காந்தியடிகளை மறவோம்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த திருமாவளவன், "காங்கிரஸ் செய்ய வேண்டியதை கமல்ஹாசன் செய்துக்கொண்டிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசனின் ஒருங்கிணைப்பில், மதுரையில் நடைபெற்ற 'காந்தியடிகளை மறவோம்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மேலும் பேசியதாவது,

"செக்குலரிசம், சோசலிசம் இந்த இரண்டும் பிஜேபிக்கு பிடிக்காது. பாசிஸ்டுகளுக்கு பிடிக்காத வார்த்தை இது. பாசிச கும்பலுக்கு பிடிக்காத சொற்கள். இந்த இரண்டையும் அரசமைப்பு சட்டத்தின் முகப்புறையிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி வழக்கு தொடுத்தார்.
இந்த 2 சொற்றொடர்கள் இன்றைக்கும் அவர்களுக்கு நெருடலாக இருக்கிறது. மகாத்மாவை இன்று சிதைக்கின்ற வேளையில் ஒரு பாசிச ஆட்சி, மோடி ஆட்சி இறங்கி இருக்கிறது. அதைதான் இந்த காலகட்டத்திற்கு எதை கையில் எடுக்க வேண்டுமோ, அதை மக்களின் மையத்தின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்திருக்கிறார். பாசிசத்தை வீழ்த்த வேண்டும் ஜனநாயகம் மலர வேண்டும், மறவாமல் மகாத்மா காந்தியை கையில் ஏந்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
காந்தியவாதிகளே உங்கள் அற்பணிப்பை மறவோம். அதே நேரத்தில் காந்தியை படுகொலை செய்தவர்களையும் நாங்கள் மறவோம் என்று நினைவுப்படுத்துகிறேன். அவர்கள் செய்த தேச துரோகத்தை நாங்கள் மறவோம்.
இதை நினைவுப்படுத்ததான் கமலின் இந்த முயற்சி. காந்தியை சிறுமைப்படுத்தும் கும்பல் இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த கும்பல் காந்தியடிகளின் நன்மதிப்பை சிதைக்கிறது. காந்தி மீது தேசம் வைத்திருக்கும் பிம்பத்தை தவிடுபொடியாக்க இந்த கும்பல் முயற்சிக்கிறது.
காந்தியின் கொள்கைகைளை ஏற்றுக்கொண்ட சர்தார் பட்லேலுக்கு வானுயர சிலை அமைத்து, பட்டேல்தான் உயர்ந்தவர், காந்தி சிறியவர் என்கிற காட்ட முயற்சிக்கும் கும்பல் கோலோச்சும் இந்த சூழலில், காந்தியின் பெயரில் இருந்த 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றுகிற அற்ப கும்பல் கோலோச்சுகிற இந்த சூழலில், பேச்சுக்கு பேச்சு, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர், தேச தலைவர் என சொல்லுவதன் மூலம் காந்தி படுகொலையை நியாபப்டுத்துகிற கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய இந்த சூழுலில் காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை கமல்ஹாசன் செய்துக்கொண்டிருக்கிறார்" என பேசியிருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications