எத்தனை நிவாரணம் கொடுத்தால் என்ன.. இழப்பை ஈடு செய்ய இயலாது.. மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து கமல்
சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பெய்த கடும் மழையில் இடிந்த கற்சுவர் அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததால் நான்கு வீடுகளில் இருந்த 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன்.

இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின் அரசும் காவல்துறையும் அதை நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது.
Makkal Needhi Maiam Party's Press Release Regarding Mettupalayam Incident.#MakkalNeedhiMaiam pic.twitter.com/Cr19SpNu6G
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 3, 2019
இருப்பினும் அவர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன். வரும் மழைக்காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து பெரும் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் இருந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications