சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போராட்டத்திற்கு முழு ஆதரவு.. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்த கமல்!

டெல்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு

    சென்னை: டெல்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

    டெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், இன்று காலை சென்னை வந்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த விவசாயிகளிடம் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். சந்திப்பை தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

     கமல் பேட்டி

    கமல் பேட்டி

    அதில், டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கை இரண்டுதான். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்களுக்கு நியாயமான விலை வைக்க வேண்டும். இது அரசால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கைதான். நான் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கிறேன். அமைதி போராட்டத்திற்கு நான் ஒத்துழைப்பு அளிக்கிறேன்.

     எல்லாம் பசி

    எல்லாம் பசி

    பசி என்பது பசிதான். அதை எப்படி சொன்னாலும் தவறு இல்லை. பசிக்காக பேசுபர்களிடம், நீங்கள் சத்தமாக பசிக்கிறது என்று சொல்கிறீர்கள், ஆடை இல்லாமல் பசிக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று கிண்டல் செய்ய கூடாது. விவசாயிகளின் பிரச்சனையைத்தான் அரசு பார்க்க வேண்டும். அவர்களின் போராட்ட வடிவத்தை பார்க்கக் கூடாது.

     கஜா புயல்

    கஜா புயல்

    கஜா புயலால் இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. 15 நாட்களாக இன்னும் நிலைமை சரியாகவில்லை , இன்னும் பல ஊர்களுக்கு நிவாரணம் செல்லவில்லை. இளைஞர்களுக்கு கூட, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.கஜா புயலை வைத்து அரசியல் செய்யவில்லை. இது மக்களின் தேவை. அதை எடுத்து சொல்வது எங்களின் கடமை.

     7 வருடம் ஆகும்

    7 வருடம் ஆகும்

    மக்களுக்கு முதலில் முதலுதவி செய்ய வேண்டும். நிவாரணம் அளித்த மத்திய அரசுக்கு நன்றி. ஆனாலும் அரசு வேகமாக செயல்பட வேண்டும். கஜாவால் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க 7 வருடமாவது ஆகும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Kamal Haasan extends his support for Farmers Protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X