சந்திரயான் 3: விக்ரம்.. விண்ணை வெல்லும்-வானும் மண்ணும் பேர் சொல்லும்.. கமல் பாடல் 'நச்' பொருத்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம்.. இந்த தலைமுறைக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல்ஹாசன் நடித்த புதிய படத்தின் பெயர்தான். 1980 கிட்ஸ்க்கு விக்ரம்.. விக்ரம்.. என கமல் பாடும் அந்த ஸ்பை மூவிதான் நினைவுக்கு வரும். அதன் தொடர்ச்சியாகத்தான் லோகேஷ் கனகராஜ் படம் சொல்லப்பட்டாலும் ஓல்ட் இஸ் கோல்டுதான்.

சந்திரயான் -3 நிலவில் தரை இறங்கும் நேரத்தில் எதற்கு இந்த சினிமா விவகாரம்? 1986 விக்ரமுக்கும் சந்திரயான், இஸ்ரோ அத்தனைக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறதே!

Kamal Haasan fans celebrate Chandrayaan-3 with Vikram Title Song

1986-ல் கமல் நடித்த விக்ரம் படத்தின் கதையே, விண்வெளி ஆய்வு மையமான ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அக்னிபுத்திரன் என்ற ஏவுகணை அனுப்பி வைக்கப்படும். அதனை சத்யராஜ் கும்பல் கடத்திச் சென்று கூட்டாளிகளை விடுவிக்க நிபந்தனை விதிக்கும். இந்த ஏவுகணையை கண்டுபிடிக்கும் ரா உளவாளி அருண்குமார் விக்ரம்தான் நம்ம கமல்ஹாசன். அப்புறம் என்ன ஏவுகணை வேட்டைதான். 1986 மே 29-ந் தேதி வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தராவிட்டாலும் பேசுபொருளாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் வரும் டைட்டில் சாங்தான் விக்ரம்.. விக்ரம்.. கவிஞர் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை கமல்ஹாசன் பாடியிருப்பார். இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளில்
" விக்ரம்.. விக்ரம்..
விக்ரம்.. விக்ரம்..
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையை சூடும்!
விக்ரம்
விக்ரம்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கு செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்
ஹஹ என் பேர் சொல்லும்

என்பதாக தொடரும் அந்தப் பாடல்.

இப்போது சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் இறக்கப் போகும் லேண்டர் பெயர் விக்ரம். வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரை இறக்கப்பட்டுவிட்டால் அன்று வைரமுத்து பாடியதைப் போல ' விண்ணை வெல்லும் வானும் மண்ணும் என் பேர் சொல்லும் விக்ரம்.. விக்ரம்": என்று பாடிவிடலாம் என்கின்றனர் கமல்ஹாசன் ரசிகர்கள். அதனால்தான் இந்த பாடல் இப்போது சமூக வலைதளங்களில் சந்திரயான் கொண்டாட்ட பாடலாக பகிரப்பட்டும் வருகிறது.

Kamal Haasan fans celebrate Chandrayaan-3 with Vikram Title Song

பொதுவாக தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஒரு நாஸ்டர்டாமஸ் என புகழப்படுகிறவர். ஏனெனில் அன்பே சிவம் திரைப்படத்தில் இன்றைய கார்டு உலகம்,டிஜிட்டல் இந்தியா பற்றி பேசியிருப்பார் கமல்ஹாசன். தசாவதாரத்தில் ஒரு வைரஸ் எப்படி உலகை நாசமாக்கும்; அதனை செயலிழக்க செய்யும் முயற்சிகள் என கொரோனாவுக்கு முன்னரே சொல்லப்பட்டிருக்கும். ஆன்லைன் மூலம் சினிமாக்களை திரையிடும் யோசனையை முன்வைத்தவரும் நம்மவர் கமல்ஹாசன்தான்.

இப்படி கமல்ஹாசனை கொண்டாடும் ரசிகர்கள், சந்திரயான் - 3 கொண்டாட்டத்திலும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் பாடலையும் கோர்த்துவிட்டு மகிழ்கின்றனர்!

விக்ரம்... விக்ரம்.. விண்ணை வெல்லும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+