கேட்டதும் கலங்கிப்போன கமல்ஹாசன்! வறுமையில் தவித்த பிளஸ் 2 மாணவியின் உயர்கல்விக்கு உதவிய மநீம தலைவர்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தெற்குவாடி மீனவ கிராமத்தை சேர்ந்த மாணவி சோபனா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றார். குடும்ப வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார். இதுபற்றி அறிந்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சோபனாவின் குடும்பத்தை நேரில் அழைத்து உயர்கல்வி பயிலவும், குடிமை பணி தேர்வுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சோபனா. இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை மீனவ கூலி தொழிலாளியாக உள்ளார். தாய் நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சோபனாவின் குடும்பத்துக்கு கடன் பிரச்சனை உள்ளது.

இருப்பினும் ஏழ்மை, கடன் பிரச்சனையை புறம்தள்ளிவிட்டு சோபனா 12ம் வகுப்பில் நன்கு படித்தார். பிளஸ் 2 தேர்வு முடிவில் அவர் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றார். அதோடு தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து சாதனை படைத்தார். இருப்பினும் கூட அவரால் உயர்கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி குடும்ப வறுமை, கடன் பிரச்சனையால் சோபனா ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றார். கல்லூரி படிப்பை படித்து குடிமைப்பணி தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்ட சோபானாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதுபற்றி அறிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மாணவி சோபானா மற்றும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து உதவி செய்துள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு உதவிய கமல்ஹாசன். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர்.
வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார். ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா.
இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக உதவினார். சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி சோபனாவின் குடும்பத்தினரை கமல்ஹாசன் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி, மாணவரணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ஷம்ஷீர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இந்த மாணவியை அழைத்து வந்து கமல்ஹாசனை சந்திக்க வைக்கும் நிகழ்வை பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலையத்தலைவர் காயத்ரி உஸ்மான், நிகழ்ச்சித் தலைவர் லெனின் ஆகியோர் செய்திருந்தனர் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications