கமல் + கலாநிதி.. வடசென்னை தொகுதியில் திமுக ஏக குஷி.. வாயை பிளக்க வைக்கும் வரலாறு
சென்னை: திமுகவின் கோட்டையாக வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திகழ்கிறது. இங்கு அதிமுக தனது வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டுமே வென்றது. திமுக இங்கு 11 முறை வென்றுள்ளது. இந்த முறை இந்த தொகுதி குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த காலங்களில் சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. சென்னையில் மொத்தம் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என நான்கு தொகுதிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மட்டும் தாம்பரம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. ஆனால் மற்ற மூன்றும் சென்னைக்குள் தான் வரும்.

வட சென்னை தொகுதியை பொறுத்தவரை 1957ல் இங்கு நடந்த முதல் தேர்தலிலேயே சுயேட்சை தான் வெற்றி பெற்றார். அதன்பிறகு தான் நடந்த தேர்தலில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு 1967ம் ஆண்டு தொடங்கி, 1971, 1977 , 1980, 1984 என ஐந்து முறை தொடர்ந்து திமுகவே வெற்றி பெற்றது. எம்ஜிஆர் ஆட்சியில் கூட அதிமுக வட சென்னையில் வெற்றி பெற்றதே இல்லை..
1989ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், 1991ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தா பாண்டியன் வெற்றி பெற்றார். அதன் பின்னர். 1996, 1998, 1999, 2004, 2009, என ஐந்து முறை நடந்த தேர்தல்களில் திமுகவே வட சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டுமே அதிமுக வட சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது. வெங்கடேஷ் பாபு என்பவர் வெற்றி பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. பாஜக கூட்டணி கன்னியாகுமரி மற்றும், தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றது.. அதிமுக கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் இருந்தது.
ஆனால் 2019ம் ஆண்டு தேர்தலில் அப்படியே தலைகீழாக மாறியது. அதிமுக ஒரு ஒரு இடத்தில் அதுவும் தேனியில் மட்டுமே வென்றது. மற்ற 38 இடங்களில் தோல்வியை தழுவியது. வட சென்னையை பொறுத்தவரை திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனாகிய கலாநிதி வீராசாமி போட்டியிட்டார்.. மொத்தம் இருவருக்கு 5,90,986 வாக்குகள் கிடைத்தது. இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், 1,29,468 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் கலாநிதி வீராசாமி , 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மௌர்யா 1,03,167 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார்.
இந்த முறையும் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. கலாநிதி வீராசாமியே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற முறை இருந்த கூட்டணியை விட கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் சேர்ந்திருப்பதால் வட சென்னை தொகுதியில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளதாக சொல்கிறத
வட சென்னை தொகுதி அதிமுகவிற்கு இந்த முறை சவாலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர் திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த ஆறு தொகுதியிலுமே 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவே வெற்றி பெற்றது. இங்கு மட்டுமல்ல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தமாக திமுக கூட்டணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications