தக் லைஃப் நாளை ரிலீஸ்.. கண்டிஷன் போடும் கர்நாடகா! கரையாத கமல்! பிரஸ் மீட்டில் சொன்ன வார்த்தை
சென்னை: கன்னட மொழிக்கு எதிராக பேசிய கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிற பிரச்சனை, கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றது. கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார். ஆனால், 'அன்பு மன்னிப்புக் கேட்காது ; சத்தியம் தலை வணங்காது' என்று மன்னிப்புக் கேட்க மறுத்து வருகிறார் கமல். இதனால், கர்நாடகாவில் கமலின் 'தக் லைப்' படம் திரையிட தடை நீடிக்கிறது. இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் கமல்ஹாசன்
கமல்ஹாசன் சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பறந்து ப்ரமோஷன் செய்து வருகிறது பட குழு.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவரை குறிப்பிட்டு பேசிய நடிகர் கமல்ஹாசன்,"ராஜ்குமார் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதன் காரணமாகவே இங்கு வந்திருக்கிறார். அதனால் தான் என் பேச்சை தொடங்கும் போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்" என பேசினார். கமல்ஹாசனின் பேச்சை ஆமோதிப்பது போல சிவராஜ்குமார் தலையசைத்தார்.
இந்த நிலையில் கன்னட மொழி பேசும் மக்களின் உணர்வுகளை கமல்ஹாசன் புண்படுத்தி விட்டதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கமல்ஹாசன் மொழியியல் வல்லுநரா? வரலாற்று ஆய்வாளரா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதோடு, மன்னிப்பு கேட்டால் என்ன? ஏன் ஈகோ பார்க்க வேண்டும்? எனவும் கூறினார். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட தயாராக இருப்பதாக கர்நாடக வர்த்தக சபை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை பேணும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கர்நாடக வர்த்தக சபை தெரிவித்திருந்தது. ஆனால் படத்தை வெளியிட முடியாது என கூறியதும் அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட தக் லைஃப் படக் குழுவினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கமல்," இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் எல்லாம் ஏற்கனவே ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பவர்கள். படைவீரர்கள் நிறைந்த படை இது. நிறைய டெக்னீசியன்ஸ் இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இயக்குனர் மணி சாருடன் பணி புரிந்தது எனக்கு குதூகலமாக இருந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அது தக் லைஃப் பற்றி அல்ல. பிறகு பேசுவோம் ஒரு தமிழனாக அதற்கான நேரத்தை ஒதுக்கி தருவது என்னுடைய கடமை" என பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications