கோவையில் வெற்றியை தொட்டு பார்த்த கமல்.. அடுத்த ரேஸுக்கு ஆயத்தம்.. வெளியானது வேட்பாளர் பட்டியல்
சென்னை: வரவிருக்கும் நகர்ப்புற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன.
இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள். #தேடி_தீர்ப்போம்_வா என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி
மேலும் முதல் கட்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதன்படி 47 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

வேட்பாளர்கள்
வெற்றியை தொட்டு பார்த்துவிட்டு வந்ததை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் கமல்ஹாசன். முதற்கட்டமாக 47 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

ஊழல்
லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேர்மையும திறமையும் உறுப்பினர்கள் கிடைக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது. பல ஆண்டுகளாக கதறியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் தெருவிலும் இருக்கின்றன. தேர்தலில வென்று அவற்றைத் தீர்த்தாக வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கின்றன.

மநீமவுக்கு திருப்புமுனை
நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள் ஒரு முன்மாதிரி மாடலாக இந்தியா முழுக்க பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப் பொழுதும் சோர்வடையாமல் உழையுங்கள். அடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் களத்தில் வாகை சூட வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மநீம போஸ்டர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள். அதில் கமல்ஹாசன் டார்ச்லைட்டை கொண்டு வேட்பாளர்களை தேடும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications