ஆஹா! "ஆழ்வார்பேட்ட ஆண்டவர்" நினைத்தபடியே கிடைத்துவிட்டதே... அப்ப நினைத்தபடியே நடக்குமா?
Recommended Video

சென்னை: தமிழகத்துக்கு ஒளியேற்ற வேண்டும் என்று அவ்வப்போது கூறி வரும் கமல்ஹாசனுக்கு சொல்லி வைத்தாற்படி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்குவதற்கு முன்னரிருந்தே தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது என கூறி வருபவர் கமல்ஹாசன். கட்சி தொடங்கிய பிறகும் மக்களைச் சந்திக்கும் அவர் இதையே கூறிவந்தார்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தபோதும் அவர் கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித் திருநாடு என டுவிட்டரில் வாழ்த்தியிருந்தார்.

வாக்களியுங்கள்
மக்களின் குறைகளை கேட்பதற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. அதற்கு ஒளியேற்றதான் நாங்கள் வந்துள்ளோம். இந்த முறை சிந்தித்து வாக்களியுங்கள் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

ஒதுக்கீடு
இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி
சின்னம் ஒதுக்கீடு குறித்து, கமல்ஹாசன் கூறுகையில் ஒளி தரும் விளக்காய் இன்று முதல் மக்கள் நீதி மய்யம் மிளிரும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நினைத்ததே தற்போது கிடைத்து விட்டது.

என்ன செய்யும்
கட்சி ரெடி, சின்னமும் ரெடியாகிவிட்டது. டார்ச் லைட் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் எளிது. கமல் கூறியது போல் மக்கள் நீதி மய்யம் மிளிருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications