சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே ஆச்சரியம்! திமுகவின் 'ஒன்றிய அரசு' முழக்கத்தை விக்ரம் படத்தில் பாட்டாவே பாடிட்டாரே கமல்ஹாசன்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மத்திய அரசுக்கு எதிராக மாநில சுயாட்சியை முன்வைக்கும் வகையில் உச்சரிப்பதுதான் ஒன்றிய அரசு. தமிழகத்தில் இப்போது ஒன்றிய அரசு என்கிற சொல் பொதுவான பயன்பாட்டுச் சொல்லாகிவிட்டது.

திமுகதான் என்று இல்லை.. திமுகவின் அத்தனை கூட்டணி கட்சிகளும் இப்போது ஒன்றிய அரசு என்றே மத்திய அரசை அழைக்கின்றன. இத்தனைக்கும் மாநில உரிமைகள் குறித்து அதிகம் பேசாத இடதுசாரிகள் கூட ஒன்றிய அரசு என்றே எழுதியும் பேசியும் வருகின்றனர்.

திமுகவை தாண்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்தி வருகிறார். இப்போது தமது விக்ரம் படத்தில் ஒன்றிய அரசை பாட்டாகவே பாடிவிட்டார் கமல்ஹாசன்.

 Kamal Haasans VIKRAM song on Union Govt

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதன் இயக்குநர் லோகே கனகராஜ். திமுக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தை வெளியிட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. .

இந்த பின்னணியில் விக்ரம் படத்தில் ஒரு பாடலின் முதல் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது. பத்தல பத்தல என்ற பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். அதிலும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பாடல் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள்தான்...

கஜானாலே காசில்லே! கல்லாலையும் காசில்லே! காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லாலே! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே! சாவி இருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!

இதுதான் கமல்ஹாசன் எழுதியுள்ள பாடல். கமல்ஹாசன் ஒன்றிய அரசு என குறிப்பிட்டுள்ள எழுதியிருக்கும் இப்பாடல்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்.

English summary
Kamal haasan also used Union Govt instead of Central Govt in his Film Vikaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X