மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்படும் நிர்வாகிகளால் பரபரப்பு
சென்னை: மாவட்ட பொறுப்பாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கமல் மதிப்பதில்லை என மக்கள் நீதி மய்யத்திலிருந்து நீக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் நீக்கப்பட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மாவட்ட பொறுப்பாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கமல் மதிப்பதில்லை.
தேர்தல் முடிவதற்குள் ஏராளமான நிர்வாகிகள் கமல் கட்சியிலிருந்து வெளியே வருவர். நான் திமுகவில் இணைய போவது தெரிந்துதான் கமல் என்னை நீக்கினார் என்றார் சீனிவாசகம்.

மக்கள் நீதி மய்யம்
இது போல் திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகரராஜா, நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர்.

கமல் மீது புகார்
முன்னதாக சிதம்பரம், கடலூர் மாவட்ட பொறுப்பாளர் குமரவேல் நீக்கப்பட்டார். இவர் செய்தியாளர்களை சந்தித்து எங்களை கோவை சரளா நேர்காணல் நடத்துவதா என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கமலை சுற்றியுள்ளவர்கள் கட்சியை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார்.

அதிர்ச்சி
லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் இவ்வாறு ஒவ்வொரு நிர்வாகியாக நீக்கப்பட்டு வருவது மற்ற நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரச்சினை என வந்தால் அதை கமலிடம் கூட முறையிட முடியாதபடி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

காது கொடுத்து கேட்க
இது போல் ஒவ்வொருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதும் கட்சியை விட்டு விலகுவதும் இருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும் அதிருப்தியாளர்களின் பிரச்சினையை கட்சி தலைமை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications