என்னுடைய அரசியல் எதிரியே ஜாதிதான்.. இயக்குநர் பா ரஞ்சித் விழாவில் கமல்ஹாசன் பேச்சு
என்னுடைய அரசியல் எதிரியே ஜாதிான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: என்னுடைய அரசியல் எதிரியே சாதிதான் என இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் ' நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்மஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார்.
பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகம், அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது.

வாழ்க்கை
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், உயிரே உறவே தமிழே.. இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.

ஆரம்ப விழா
பா. ரஞ்சித்தின் ஆரம்ப விழாக்களிலெல்லாம் நான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நானும் அவரும் இல்லாத போதும் இருக்கும் தாக்கம் இது. அரசியல் என்பதை தனியாகவும், கலாசாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆளும் கட்சி,ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

நியமித்தவர்
நான் நியமித்தவர் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும் பட்சத்தில் ஜனநாயகம் நீடுழி வாழும். தலைவனை வெளியே தேடிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கு குடிமகன்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தன்னளவில் தலைவன் தான் என்று நினைக்கும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.

21வயது முதல்
அரசியலில் என்னுடைய மிக முக்கியமான எதிரி சாதிதான். நான் அதை இன்று சொல்லவில்லை; அதை நான் 21 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்போது நான் அதனை தரமான வார்த்தைகளில் பக்குவமாக சொல்கிறேன். ஆனால் கருத்து மாறவே இல்லை. சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதை மறந்து விடாதீர்கள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் கொடூரமான ஆயுதம் சாதி.

மூன்று தலைமுறைகள்
இது எனக்கு மூன்று தலைமுறைகளை முன்னர் இருந்த அம்பேத்கர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது; ஆனால் இன்றும் நடந்த பாடில்லை; எழுத்து வேண்டுமானால் வேற வேறயாக இருக்கலாம்.
ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான். அரசியலில் இருந்து ஜாதியை ஒழிக்கும் போராட்டம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதியாகிய பின்னர் சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வாழ்த்துகள்
ரஞ்சித்திற்கும் அவர் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள. தடலங்கள் நிறைய வரும். ஆனால் அவற்றை மீறி பயணிக்க வேண்டும் னஎ கமல்ஹாசன் அறிவுறுத்தியிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் அரசியல் அடிப்படையிலான புத்தகங்களை மட்டுமே விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறியிருந்தார். அடிமை சிந்தனையை மாற்றவும் அரசியல் விழிப்புணர்வோடு இருக்கவும் நீலம் பதிப்பக புத்தகங்கள் உதவும் என ரஞ்சித் தெரிவித்துளளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications